Connect with us

இலங்கை

படுகொலையின் நீதிக்காக அணையா தீபம் முற்றத்தில் குரு முதல்வர் குமுறல்!

Published

on

Loading

படுகொலையின் நீதிக்காக அணையா தீபம் முற்றத்தில் குரு முதல்வர் குமுறல்!

நாட்டில் இருக்கும் இனங்களுக்கிடையிலானபிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு தீர்வை தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டிய  இலங்கை திருச்சபையின் யாழ் குரு முதல்வர் செல்வன் செம்மணி படுகொலையின் நீதிக்காக மக்களாகிய நாமே முழுமையாக முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று 28ஆம் திகதி மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துக் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

செம்மணி என்பது இனப்பொடுகொலை நடத்தப்பட்டதன் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சாட்சியுமாகும். இந்த சாட்சியமே இன்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதையும் அதற்கான நீதி வேண்டும் என்பதையும் சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லுகின்றது. எனவே அதற்கான வலுப்படுத்தலை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுப்பது அவசியமாகும். அதற்காகவே மெதடிஸ்த திருச்சபை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதேநேரம் கொல்லப்பட்டவர்களின் குருதிகள் தமக்கான நீதியை பெற்றுத்தாருங்கள் என எங்கள் ஒவ்விருவரிடமும் ஓலமிட்டவண்ணம் இருக்கின்றன. அந்த ஓலங்களுக்கு நாம் நீதியை இலங்கையில் இந்த அரசிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. எனவே சர்வதேசத்திடம் இதற்கான நீதியை கோரி நிற்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா ஜெகதாஸ், அருள்பணி அருளானந்தம் சமுவேல் சுபேந்திரன், வேலன்சுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன