Connect with us

பொழுதுபோக்கு

எம்.ஜி.ஆருக்காக எழுதிய ரொமான்டிக் பாடல்; சிவாஜி படத்தில் வந்து செம்ம ஹிட்டு: பாட்டு மாறியது இப்படித்தான்!

Published

on

MSV and MGR sivaji

Loading

எம்.ஜி.ஆருக்காக எழுதிய ரொமான்டிக் பாடல்; சிவாஜி படத்தில் வந்து செம்ம ஹிட்டு: பாட்டு மாறியது இப்படித்தான்!

தனது படங்களில் பாடல்களை தானே தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பும், எம்.ஜி.ஆர் கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய ஒரு பாடலை வேண்டாம் என்று சொல்ல, அந்த பாடல், சிவாஜியின் படத்தில் இடம் பெற்று ஹிட் அடித்துள்ளது. எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோவில் என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமாக கவிஞர் புலமைப்பித்தன், எம்.ஜி.ஆருக்காக பல ஹிட் பாடல்களை எழுதியுள்ள இவர், எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார். அதே சமயம் அடிப்படையில் இவர் சிவாஜியின் தீவிர ரசிகர். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதே சமயம், எம்.ஜி.ஆர் படத்தில் பாடல் எழுதும்போது சிவாஜி படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு வர, எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டு பாடல் எழுதியுள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் தான் சிவாஜி கணேசனின் பரம ரசிகன். அவரின் ஒவ்வொரு அசைவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். நானே ஒரு நாடக குழுவை நடத்தி நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தவன். 1974-ம் ஆண்டு வெளியான சிவகாமியின் செல்வன் என்ற படத்தின் மூலம் சிவாஜி படத்தில் பாடல்கள் எழுத தொடங்கினேன். எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன் என்ற படத்திற்காக எத்தனை அழக்கு கொட்டுக்கிடக்கு என்ற பாடலை எழுதினேன். என்று பாடி வந்தேன் என்ற பாடலை நான் எழுதியிருந்தேன். இந்த பாடல் டியூன் செய்த பின்னர் படத்தில் இடம்பெற தேர்வாகவில்லை. ஆனால் சிவகாமியின் செல்வன் படத்திற்காக இந்த பாடலை கேட்ட உடனே படத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். இது பற்றி இசையமைப்பாளர் எம்.எஸ்.வியிடம் கேட்டபோது, அவர் பாடலை நான் விற்றுவிட்டேன் என்று சொன்னார்.  அதன்பிறகு இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்லலாம் என்று ஜெமினி ஸ்டூடியோவுக்கு சென்று சொன்னேன். அண்ணே சிவாஜி படத்திற்கு பாடல் எழுதுகிறேன் என்று சொன்னதும் அவர் அதிர்ச்சியடைந்தார். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நான் எழுதவில்லை என்று சொன்னேன்.அதன்பிறகு அவர் எல்லா படத்திற்கும் எழுதுங்கள் என்று சொன்னார். அதன்பிறகு சிவகாமியின் செல்வன் படத்திற்கு பாடல் எழுதியதை தொடர்ந்து, சிவாஜியின் தீபம் படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதினேன். அப்போது இளையராஜா இசையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலம். அந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் நான் தான் எழுத வேண்டும் என்று கே.பாலாஜி விரும்பினார் என்று தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் படத்திற்காக எழுதப்பட்ட ஒரு பாடல், அவர் படத்தில் இடம்பெறாமல் போய், சிவாஜிக்கு பொருத்தமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன