Connect with us

சினிமா

அடேங்கப்பா.! தங்கம் வென்ற கார்த்திகாவிற்கு நிதியுதவி வழங்கிய பைசன் படக்குழு.!

Published

on

Loading

அடேங்கப்பா.! தங்கம் வென்ற கார்த்திகாவிற்கு நிதியுதவி வழங்கிய பைசன் படக்குழு.!

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி வென்ற தங்கப் பதக்கம், நாட்டின் பெருமையுடன் தமிழ்நாட்டிற்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் மாறியுள்ளது. இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் கார்த்திகா. தன்னுடைய திறமையாலும், தைரியத்தாலும், அணியை இறுதி வரை வழிநடத்தி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.இந்தியா இறுதிப் போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்த வெற்றியின் பின்னணியில் இருந்த வீராங்கனைகளில் ஒருவர் கார்த்திகா என்பதால் தமிழகத்தில் பலரும் பெருமைப்படுகின்றனர்.தமிழ்நாட்டின் கண்ணகி நகர் பகுதியில் பிறந்து வளர்ந்த கார்த்திகா, சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் பயிற்சியாளர் குழுவின் உழைப்பால், இன்று சர்வதேச அளவில் தங்கம் வென்ற வீராங்கனையாக வளர்ந்துள்ளார்.இவ்வளவு பெரிய சாதனையை மேற்கொண்ட கார்த்திகாவை பாராட்டும் விதமாக, இயக்குநர் மாரி செல்வராஜ் தலைமையிலான “பைசன்” படக்குழு முன்வந்துள்ளது. அவர் மற்றும் அவரது குழு, கார்த்திகாவிற்கு 5 லட்சம் ரூபாய் காசோலையையும், மேலும் அவரது கண்ணகி நகர் கபடி அணிக்கு 5 லட்சம் ரூபாய் காசோலையையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.இந்த நிதியுதவி ஒரு பாராட்டு மட்டுமல்ல, எதிர்காலத்தில் இன்னும் பல பெண்கள் விளையாட்டில் முன்னேற உதவும் ஒரு ஊக்கமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன