இந்தியா
காரைக்காலில் நவ.10 முதல் கனமழை: வடிகால்களைப் போர்க்கால அடிப்படையில் தூர்வார அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் உத்தரவு
காரைக்காலில் நவ.10 முதல் கனமழை: வடிகால்களைப் போர்க்கால அடிப்படையில் தூர்வார அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் உத்தரவு
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர் வாருவது குறித்தான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ் ரவி பிரகாஷ் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (31.10.2025) நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் பேசியதாவது:காரைக்கால் மாவட்டத்தில் மழைக்காலம் தீவிரமாக தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்தில் உள்ள பாய்கள், வடிகால்களை முழுவதுமாக தூர்வாரி பணிகளை தீவிர படுத்த வேண்டும். வடிகால்களில் மனிதக் கழிவுகளை கலக்காத வண்ணம் நகராட்சி மற்றும் பொதுப்பணி அதிகாரிகள் கண்காணிப்பதுடன் வடிகால்களில் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக தூர்வாரி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். காரைக்கால் நகரப் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால்களை முறையாக தூர்வாரி, தூர்வாரும் பணிகளுக்கு கூடுதலாக ஜேசிபி இயந்திரம், டிராக்டர்,நீர் இறைக்கும் பம்பு செட்டுகள்,கூடுதல் பணியாளர்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். காரைக்கால் நகர பகுதிகளில் ஹெச்.ஆர்.ஸ்கொயர் மூலம் குப்பைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சாலைகளில் தேங்காமல் இருப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வருகிற 10-ம் தேதி முதல் கன மழை தொடங்கும் என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள வடிகால் வாய்க்கல்களை முழு வீச்சில் தூர்வாரி வெள்ளநீர் தேங்காாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக எங்கெங்கு தண்ணீர் தேங்கும் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து தூர் வாரும் பணிகளை தீவிர படுத்த வேண்டும்.எதிர்கால பணிகளை கருத்தில் கொண்டு அரசலாற்றில் மணல் குன்றுகளை அகற்றுவதற்கு தூர்வாரும் பணிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோப்புகளை தயார் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி
