Connect with us

இலங்கை

யாழில் அரங்கேறும் இரகசிய சதி ; சிக்கும் புலம்பெயர் தமிழர்கள்; முக்கிய புள்ளி வெளிப்படுத்திய பகீர் தகவல்

Published

on

Loading

யாழில் அரங்கேறும் இரகசிய சதி ; சிக்கும் புலம்பெயர் தமிழர்கள்; முக்கிய புள்ளி வெளிப்படுத்திய பகீர் தகவல்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண பகுதிகளில் புலம்பெயர் நாட்டிலுள்ளவர்களை பாரிய மோசடி வலையில்  சிக்கவைத்து அவர்களிடமிருந்து போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்  பணம் பறிப்பதாக என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடக வலையமைப்பின்  ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

இது தொடர்பில் மேலும்  கருத்து தெரிவித்த அவர்,

புலம்பெயர் நாட்டிலுள்ளவர்கள் இலங்கையில் திருமணம் செய்கின்றார்கள், அவர்களிடம் பணம் இருப்பதாக இங்குள்ளவர்களுக்கு தெரியும் அவர்களை வெளியில் கூறமுடியாத வலையில் சிக்கவைத்து போதைப்பொருளுக்கு அடிமையான கேங்ஸ்டர்கள் பணம் பறிக்கின்றனர்.

பெண்களையும், குறிப்பாக பாடசாலை மாணவிகளை பயன்படுத்தி இந்த வேலைகள் இடம்பெறுகின்றன. பெண்கள் தவறான முடிவெடுப்பதற்கு பின்னர் இவ்வாறான காரணங்கள் இருக்கின்றது.

Advertisement

இந்த மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து எதிர்காலத்தில் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன