சினிமா
“ஜோ” ஹிட்டுக்குப் பிறகு ரியோவிற்கு இப்டி ஒரு வரவேற்பா.? “ஆண் பாவம் பொல்லாதது” வசூல் இதோ
“ஜோ” ஹிட்டுக்குப் பிறகு ரியோவிற்கு இப்டி ஒரு வரவேற்பா.? “ஆண் பாவம் பொல்லாதது” வசூல் இதோ
ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடித்திருக்கும் “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் நேற்று (அக்டோபர் 31) வெளியாகியுள்ளது. “ஜோ” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் ரியோ ராஜ் மீண்டும் ஒரு ஹிட் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்துள்ளது.2023-ல் வெளிவந்த ஜோ திரைப்படம் ரியோ ராஜின் திரை வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. கதை, உணர்ச்சி, பாடல்கள் என அனைத்தும் சேர்ந்து அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ரியோவின் நடிப்பு மற்றும் மாளவிகா மனோஜின் இயல்பான பங்கேற்பு விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டை பெற்றது.அந்த வெற்றியின் பின்னணியில், இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ஆண் பாவம் பொல்லாதது படத்துக்கு ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர். டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், படம் வெளியான பின் கிடைத்த விமர்சனங்கள் கலவையாகவே உள்ளன.திரைப்படத்தைப் பார்த்த விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் ரியோ ராஜின் நடிப்பையும் மாளவிகா மனோஜின் கவர்ச்சியான ஸ்கிரீன் பிரசென்ஸையும் பாராட்டியுள்ளார்கள். ஆனால், சிலர் திரைக்கதை பல இடங்களில் சலிப்பு தருகிறது என்றும், இரண்டாம் பாதி பலவீனமாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.இந்நிலையில், சாக்னிக் வெளியிட்ட தகவலின் படி, ஆண் பாவம் பொல்லாதது படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் மொத்தம் 48 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
