Connect with us

பொழுதுபோக்கு

எம்.ஜி.ஆரின் இரு படங்கள் ஒரே க்ளைமேக்ஸ்; சீரியஸை காமெடி ஆக்கிய மணிவண்ணன்: செம்ம சிரிப்பு காட்சி!

Published

on

MGR Manivannan

Loading

எம்.ஜி.ஆரின் இரு படங்கள் ஒரே க்ளைமேக்ஸ்; சீரியஸை காமெடி ஆக்கிய மணிவண்ணன்: செம்ம சிரிப்பு காட்சி!

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் இரட்டை வேடங்களில் நடித்தால், படத்தின் தொடக்கத்தில் பிரிந்துவிடுவார்கள். க்ளைமேக்ஸில் இணைந்து விடுவார்கள். பெரும்பாலான படங்களில் இந்த நடைமுறை தான் இருக்கும். அதேபோல், இரட்டையர்கள் ஒருவர் வில்லன் என்றால், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நான் தான் நல்லவன் என்று இருவருமே சண்டை போட்டுவார்கள்  அந்த வகையில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த 2 படங்கள் ஒரே மாதிரியான் க்ளைமேக்ஸ் அமைந்துள்ளது பலரும் அறியாத ஒரு தகவல். ஆசை முகம்பி.புள்ளையாக இயக்கத்தில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியான படம் தான் ஆசை முகம். எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இணைந்து நடித்த இந்த படத்தில், நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் மனோகர் என்ற கேரக்டரில் சரோஜா தேவியை காதலிக்கும் தொழிலதிபரின் மகன் கேரக்டரில் நடித்திருப்பார். இவரது சொத்துக்களை கைப்பற்ற நினைக்கும் நம்பியார், தனது உதவியாளருக்கு எம்.ஜி.ஆர் போல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துவிடுவார். இதன்பிறகு யார் உண்மையான மனோகர்? யார் போலி? கடைசியில் சொத்துக்கள் யார் பக்கம் என்பது என்பது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் படத்தின் க்ளைமேக்ஸ். இறுதியில், திருமண மேடையில் சரோஜா தேவி மாலையும் கழுத்துமாக நிற்க, யார் உண்மையான மனோகரன் என்ற குழப்பம் ஏற்படும். அப்போது ஒரு மவுத்தார்கன் கொடுத்து உண்மையான மனோகரன் இதை சிறப்பாக வித்தியாசமான ஒரு டியூனை வாசிப்பார் என்று சொல்ல, இருவருமே அதேபோல் வாசிப்பார்கள். இதன் காரணமாக யார் உண்மை என்று தெரியாதைதால், உண்மையை கண்டறிய திராவகத்தை முகத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்ல, உண்மையான மனோகர் போலியின் முகத்தில் திராவகத்தை ஊற்றிவிடுவார். அதன்பிறகு உண்மையில் யார் ஒரிஜினல் மனோகர் என்பது தெரியவரும்.நினைத்ததை முடிப்பவன்ஆசை முகம் படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து 1975-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் தான் நினைத்ததை முடிப்பவன். இந்த படத்தில் கடத்தல் மன்னன் ரஞ்சித், சாதாரன குடும்பத்தை சேர்ந்த இசை கலைஞர் சுந்தரம் என இரு கேரக்டரில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி சென்றுவிட, இறுதியில் நீதிமன்றத்தில் நான் தான் சுந்தரம் என்று இருவருமே சொல்வார்கள். இவர்களில் யார் உண்மை என்பதை கண்டுபிடிக்க, சுந்தரத்தின் தங்கை தனது அண்ணன் சிறப்பாக வாசிப்பார் என்று, இசை கருவியை கொடுப்பார்.அந்த இசைக்கருவியில் இருவரும் ஒரே மாதிரியாக வாசித்துவிடுவார்கள். இதனால் யார் உண்மை யார் போலி என்று தெரியாத நிலையில், ஒரு இறந்த பெண்ணின் உடல் நீதிமன்றத்திற்கு வருகிறது. அவரை தனது தாய் என்று தெரிந்துகொண்ட ரஞ்சித், அம்மா என்று அழுகிறார். இதனால் யார் உண்மையான ரஞ்சித் என்று நீதிமன்றத்திற்கு தெரிந்துவிடுகிறது. அதன்பிறகு அவரே உண்மையையும் ஒப்புக்கொள்வார். இந்த இரு படத்திற்கும் 10 ஆண்டுகள் இடைவேளி, இயக்குனர்கள் வேறு ஆனால் க்ளைமேக்ஸ் மட்டும் ஒரே மாதிரி அமைத்திருக்கிறார்கள். உள்ளத்தை அள்ளித்தாஇதேபோல் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கூட மணிவண்ணன் இரட்டை வேடத்தில் நடித்து படத்தின் க்ளைமேக்ஸில், நல்லவர் காசிநாதன் யார் என்பதில் இருவரும் போட்டியிடுவார்கள். இடுப்பில் குத்தினால் கத்துவார் அவர் தான் காசிநாதன் என்று சொல்ல இருவருமெ ஒரே மாதிரி ரியாக்ஷன் கொடுப்பார்கள். இந்த படம் காமெடியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன