Connect with us

இலங்கை

யாழில் சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!

Published

on

Loading

யாழில் சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!

இன்று 01ஆம் திகதி  சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண நகரப் பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம், பட்டலந்தை வதை முகாம் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், ஏனைய மனித புதைகுழி விவகாரம் போன்றவற்றுக்கு உடனடி விசாரணைகளையும், நீதியையும் வேண்டி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, “அனைத்து காணாமல் போனவர்களுக்கும்  இப்போதாவது நீதியை வழக்கு, செம்மணியை  மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து, மீண்டும் மீண்டும் அடக்குமுறைகள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அனைத்து தேசிய இனங்களுக்குமான உரிமையை உறுதிசெய்” என்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்த போராட்டத்தில் பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், வசந்த முதலிகே, சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன