Connect with us

சினிமா

என்னை இந்த இடத்திற்கு தள்ளிட்டாங்க..! மேடையில் உடைந்து அழுது பேசிய ஆனந்தராஜ்

Published

on

Loading

என்னை இந்த இடத்திற்கு தள்ளிட்டாங்க..! மேடையில் உடைந்து அழுது பேசிய ஆனந்தராஜ்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறியப்பட்டவர் நடிகர் ஆனந்தராஜ்.  இவர் அந்த காலத்தில் வில்லாதி வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். ஆனால் இன்றைக்கு காமெடியனாகவும் தனக்கு கிடைக்கும்  சின்ன சின்ன கேரக்டர்களிலும் நடித்து வருகின்றார். நடிகர் ஆனந்த்ராஜ் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள படம் தான் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி .  இந்த படத்தின்  ப்ரோமோஷன் விழாவில் அவர்  தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி  கண்ணீர் மல்க பேசியுள்ளார். தற்போது அவர் உடைய  கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.அதன்படி அவர் கூறுகையில், ஒரு பெரிய நடிகர் தன்னை பற்றி,  தனது கேரியரை பற்றி சொல்லும்போது அனைவரும் ரசிப்போம். நானும் கிட்டத்தட்ட அப்படித்தான். எனக்கும் யாரும் இல்லை, பின்புலம் கிடையாது. நானும் போராடி வந்தவன் தான். நடிக்கும் போது எனக்கும் பயம் இருந்துச்சு. மேலும் நானும் ஒரு சராசரி மனுஷன் தான். எனக்கு போட்டியே இல்லை என்று நினைக்கின்றார்கள்.  ஆனால் என்னை இந்த படத்தில் நடிக்க தள்ளியது யார் என்று நினைக்கின்றீர்கள்? எனது முதுகுக்கு பின்னால் எல்லாம் காயமும், இரத்த வடுக்களும் தான் உள்ளன. என்னை குத்திக் குத்தி கொன்று விட்டார்கள்.  ஒரு படத்தில் நடிக்க வீட்டிற்கு  வந்து பேசுவார்கள். ஆனால் அந்த படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டு விடுவேன். அதற்கு அந்தப் படத்தின் கதாநாயகனோ அல்லது வேறு யாரோ காரணமாக இருக்கலாம்.  எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கண்ணீர் மல்க பேசினார்.என்னை இந்த இடத்திற்கு தள்ளி விட்டார்கள். தயவுசெய்து கலையை கலையாக மட்டும் பாருங்கள். நான் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன் என்று பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன