Connect with us

பொழுதுபோக்கு

கருத்த சொல்லுங்க… நீங்க யாரு தராதரம் பத்தி பேச; போட்டியாளர்களை வறுத்தெடுத்த விஜய்சேதுபதி

Published

on

vijaysethupathi

Loading

கருத்த சொல்லுங்க… நீங்க யாரு தராதரம் பத்தி பேச; போட்டியாளர்களை வறுத்தெடுத்த விஜய்சேதுபதி

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 20 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் திரைப்பிரபலங்களுக்கு பதிலாக சமூக வலைதள பிரபலங்கள் அதிகம் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் பிரச்சனையை தாரக மந்திரமாக கடைப்பிடித்து வருகின்றனர்.எதற்கெடுத்தாலும் சண்டை என்ன செய்தாலும் சண்டை என்ற லெவலில் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியா? இல்லை சவுண்ட் பாக்ஸ் நிகழ்ச்சியா? என்ற ரேஞ்சிற்கு மக்கள் கடுப்பில் உள்ளனர். இந்த வீட்டில் எப்போதும் சண்டை மட்டும் தான் இருக்குமா? சந்தோசமான நிகழ்வுகள் நடக்கவே நடக்காதா? என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் கண்டெண்ட் கொடுப்பதே வி.ஜே.பார்வதி தான் இவர்கள் இல்லாமல் இந்த 20 நாட்களில் எந்த ப்ரொமோவும் வருவதில்லை. எப்ப பார்த்தாலும் சண்டை என்று அதிருப்தி அடைந்த மக்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 90’ஸ் கிட்ஸ் விளையாட்டுகள் எல்லாம் விளையாடினர். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பதிவிட்டு வந்தனர்.பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே., ஆதிரை ஆகியோர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் வி.ஜே.பார்வதி எலிமினேட்டாவார் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்கும் விதமாக தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே இறங்க உள்ளனர். முன்பு 50 நாட்களுக்கு மேல் தான் வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். ஆனால், தற்போது 30 நாட்கள் முடிவடையாத நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளனர்.#Day27#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/2zJuHlpiItவைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் களத்தில் இறங்க உள்ளனர். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் பல டுவிஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 27-ஆம் நாளின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதி, விஜய் சேதுபதி டிவி-யில் போட்டியாளர்கள் சண்டை போடுவதை பார்த்து கத்துறாங்க கத்திக்கிட்டே இருக்காங்க.. இவங்களுக்கு இப்படி சொன்னா புரியாது. சொல்லிருவோமா என்று கேட்கிறார். இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது.#Day27#Promo3 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/UTONjDaYwyஇரண்டாவது ப்ரொமோவில் மேடைக்கு மைக்குடன் வந்த விஜய்சேதுபதி, பிக்பாஸ் போட்டியாளர்களை பார்த்து எல்லாரும் நல்லா இருக்கீங்களா? கத்திக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பாக்குறது. உங்களுக்கு தெரிய வேணாமா? பேசுனா புரியுமா? கத்துனாதான் புரியுமா? கேட்குதா பாரு, வினோத், திவாகர் என்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.A post shared by Vijay Television (@vijaytelevision)மூன்றாவது ப்ரொமோவில், விஜய்சேதுபதி,  எதுக்கு இவ்வளவு சத்தம் பாரு. ஒரு விஷயம் சொல்ல விரும்புறீங்களா? இன்னொருதர் அமைதியா இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்க நீங்க அமைதியா இருந்தீங்களா? திவாகரிடம் பேசிய விஜய் சேதுபதி கத்திக்கிட்டே இருக்கீங்க. இவரு தராதரம்  மீட்டரோட உள்ள போய்யிருக்கார். உங்களுக்கு வேண்டிய கருத்த சொல்லுங்க அது என்ன சார் தராதரம். நீங்க யாரு சார் இன்னொருதர் தகுதி தராதரம் பத்தி சொல்றதுக்கு என்றார். இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன