இலங்கை
எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
நவம்பர் மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த திருத்தமும் இல்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 31ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை அறிவித்திருந்தது. இந்நிலையில், 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாகும். மேலும், 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
