பொழுதுபோக்கு
டீமனான போட்டியாளர்… பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடி வெளியேற்றம்; பரபரப்பு முடிவால் அதிகரித்த பதற்றம்
டீமனான போட்டியாளர்… பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடி வெளியேற்றம்; பரபரப்பு முடிவால் அதிகரித்த பதற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோன்று, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகர்ஜுனாவும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான்கான் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகின்றனர்.தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்பது சீசன்களை எட்டியுள்ளது. சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஆயிஷா கலந்து கொண்டார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் தினம், தினம் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரொமோ இணையத்தில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.Deii Tamil team inga parunga 😎Learn from other states 👻Sorry da… this ain’t the solution!If #Nagarjuna handled it like in Telugu #Bb#Kamrudhin kku ippo red cardPoi irukkum 💥#BiggBoss9Tamil#BiggBossTelugu9#BiggBossTamil#BB9pic.twitter.com/m7hDLTiyA0முதல் ப்ரொமோவில் நடிகர் நாகர்ஜுனா மேடைக்கு வந்து போட்டியாளர்கள் இடையே பிரியாணி டாஸ்க்கை அறிமுகம் செய்கிறார். அதாவது பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடிக்க வேண்டும். அதிக பொருட்களை கண்டுபிடிக்கும் குழு பிரியாணி செய்து அதை சுவைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த டாஸ்க் அறிவிக்கப்பட்டதும் போட்டியாளர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது. அப்போது, பரணி, மாதுரியிடம் மற்ற அணியினருக்கு பரிமாறும் வரை காத்திருக்கலாமா என்று கேட்கிறார். இதனால், மாதுரி அந்த இடத்தில் இருந்து செல்கிறார். அப்போது திவ்யா, மாதுரியிடம் நிலமையை எடுத்துச் சொல்ல முயல்கிறார்.அதன்பிறகு, திவ்யா தேவையில்லாமல் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிடுவதாகவும் உனக்கு பதிலாக அவள் கேமை விளையாடுகிறாளா என்று பரணியிடம் தனுஜா கேட்கிறார். இதனுடன் முதல் ப்ரொமோ முடிவடைகிறது. இதையடுத்து, வெளியான இரண்டாவது ப்ரொமோவில், நடிகர் நாகர்ஜுனா, சுமனை தகுதியற்ற கேப்டன் என்று கூறியதற்காக சஞ்சனாவை கண்டிக்கிறார். இதையடுத்து, மூளையற்றவர்கள் போன்ற புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மாதுரியை வான் செய்கிறார். மேலும், கல்யாண் மற்றும் தனுஜாவின் கிட்சன் பிரச்சனைகளை எடுத்துக் கூறிய நாகர்ஜுனா, திவ்யாவிடம் நீங்கள் யார் சரி என்று நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார். அவர் தனுஜா தான் சரி என்றும் கல்யாண் வாரம் முழுவது தனுஜாவிடம் பிரச்சனை செய்ததாக கூறுகிறார்.The other person #Rithu has no problem with that unintentional handlingAnd she is saying the same infront of everyone & HostThis is not acceptable from Management, he is just a Commoner, playing & working more than anyone else.More power to you #DemonPavan#BiggBossTelugu9pic.twitter.com/ORF9dw453zஇதையடுத்து மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கேப்டன் ரூமில் வைத்து பவன், ரித்துவிடம் பேச முயல்கிறார். அப்போது ரித்து பேச மறுப்பதால் பவன் அவரை மிகவும் கடினமாக தடுத்து நிறுத்துகிறார். இந்த வீடியோவை பார்த்த நாகர்ஜுனா, ஆடியன்ஸிடம் டீமன் பவனின் இந்த செயல் ஏற்கத்தக்கதா? என்று கேட்கிறார். அவர்கள் ஒரு மனதாக இல்லை என்று கூறுகின்றனர். இதையடுத்து போட்டியாளர் பவனை தனது பைகளை பேக் செய்ய சொல்லிய நாகார்ஜுனா, பிக்பாஸ் கேட்டை திறக்க சொல்கிறார். ரித்து, பவனை பாதுக்காக்க முயல்கிறார் ஆனால் நாகர்ஜுனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். மற்றொரு வீடியோவில் பவன், ரித்துவிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார். இந்த வீடியோ பேசுபொருளாகியுள்ளது.
