சினிமா
தனது அப்பா பெயரை சொன்ன க்ரிஷ்.? கதிகலங்கி போன ரோகிணி.! அடுத்த உருட்டுக்கு தயார்
தனது அப்பா பெயரை சொன்ன க்ரிஷ்.? கதிகலங்கி போன ரோகிணி.! அடுத்த உருட்டுக்கு தயார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகின்றது. அதிலும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான புதிய கதைக்களம் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். அதன்படி அதில், க்ரிஷை சந்திக்க ரோகினி செல்கின்றார். அங்கு ஸ்கூலில் கட்டுரை ஒன்றை எழுத சொல்லி இருக்காங்க. ஆனா அது அப்பா பத்தி எழுத சொல்லி இருக்காங்க.. அதனால எனக்கு கஷ்டமா இருக்கு.. அப்பா யாரு அப்படி என்று க்ரிஷ் கேட்க, ரோகிணி ஜோசிக்கின்றார். இதனால் க்ரிஷ் உடனே அப்படி என்றால் நான் அப்பா பெயர் மனோஜ் என்று சொல்லவா என்று கேட்க, உடனே அவரை கட்டி அணைத்து கலங்குகின்றார் ரோகிணி. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. எனவே இந்த ப்ரோமோ தற்போது க்ரிஷ் அப்பா பற்றி வெளியாகி இருக்கும் நிலையில், அவர் எழுத உள்ள கட்டுரை எதிர்வரும் எபிசோட்டுகளில் மீனா, முத்து கண்களில் சிக்குமா? இந்த விஷயம் வெளி வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
