சினிமா
குழந்தைகளை பிக்பாஸ் பார்க்க விடாதீங்க.!! ஆதிரையின் வெளிப்படையான பேச்சு வைரல்.!
குழந்தைகளை பிக்பாஸ் பார்க்க விடாதீங்க.!! ஆதிரையின் வெளிப்படையான பேச்சு வைரல்.!
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதிரை, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பகிர்ந்த சில கருத்துகள் தற்போது இணையத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.பிக்பாஸ் சீசன் 9 தொடங்கியதிலிருந்து ஆதிரை பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.வீட்டுக்குள் இருந்தபோது பல சமயங்களில் அவர் தனது கருத்துகளை நேரடியாக வெளிப்படுத்தி இருந்தார். இதனால் அவரை சிலர் பாராட்டியதுடன் விமர்சிக்கவும் செய்தனர்.தற்பொழுது ஆதிரை ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறிய சில வரிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.அவர் கூறியதாவது, “குழந்தைகளை ஏன் பிக்பாஸ் பார்க்க விடுறீங்க? அங்க இருக்கிற எல்லாருமே அடல்ட். திடீர்னு கெட்ட வார்த்தை பேசுவாங்க, திடீர்னு டபுள் மீனிங்ல பேசுவாங்க. தயவு செய்து குழந்தைகளை பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க விடாதீங்க.” என்றார். ஆதிரையின் இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
