Connect with us

இந்தியா

மதுரை எய்ம்ஸ் திறப்பு விழா எப்போது? RTI-யில் வெளிவந்த தகவல்!

Published

on

Loading

மதுரை எய்ம்ஸ் திறப்பு விழா எப்போது? RTI-யில் வெளிவந்த தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ஆனால் அதன் பின்னர் 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அரசியல் களத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

சுற்றுச்சுவருடன் நிறுத்தப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை கடந்த மார்ச் மாதம் துவக்கியது எல்அன்டி நிறுவனம். மேலும் இந்த பணிகளை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கவுள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டிமுடிக்கப்படும் என்று தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சண்முக ராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரை எய்ம்ஸ் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு ஆர்டிஐ-ல் பதில் தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது அடுத்த 33 மாதங்களில் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், முதற்கட்டமாக ரூ.1,118.35 கோடிக்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன