பொழுதுபோக்கு
அட்வான்ஸ் வாங்கி டேட் தராத கார்த்திக்; கேப்டன் பேசியும் முடியாத பஞ்சாயத்து: இன்னைக்கும் இப்படி தான்!
அட்வான்ஸ் வாங்கி டேட் தராத கார்த்திக்; கேப்டன் பேசியும் முடியாத பஞ்சாயத்து: இன்னைக்கும் இப்படி தான்!
90-களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் நடிகர் முத்துராமனின் மகனாவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்திக் தனது திறமையால் ஒட்டுமொத்த திரைத்துறையையும் தன்னுடைய கால்ஷீட்டிற்கு காத்துக் கிடக்கும்படி செய்தார்.இந்நிலையில் நடிகர் கார்த்திக் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக இயக்குநர் பாரதி கண்ணன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு நடிகர் கார்த்திக்கை வைத்து படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘தீபாவளி’ என்று படத்திற்கு டைட்டில் வைத்தேன். அந்த நேரத்தில் நடிகர் கார்த்திக் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நேரம். ஒரு பி.ஆர்.ஓவை பிடித்து கார்த்திக்கிடம் பேசினோம். கதை சொல்ல நடிகர் கார்த்திக் வீட்டிற்கு ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸோட சென்றோம். நடிகர் கார்த்திக் தன்னிடம் படத்தில் நடிக்க முன்பணம் வாங்கிவிட்டு..டேக்கா குடுத்ததை மிமிக்ரி செய்து விவரித்த இயக்குனர் பாரதி கண்ணன்.இப்போதும் பல ஹீரோக்கள் இந்த டகால்டி வேலையை செய்கிறார்கள். ஆடியோ லாஞ்ச் பேச்சுகளில் மட்டும்தான் இவர்கள் யோக்கியர்கள்.pic.twitter.com/RMbxhIQAoQஅட்வான்ஸ் கொடுக்கும் போது பணத்தை நான் கையில் தொடுவதில்லை அப்பா படத்தின் முன்பு வைத்துவிடுங்கள் என்றார். அதன்பின்னர் அவர் போட்டிருந்த ஒரு செயினின் டாலரை பிடித்துக் கொண்டு பாரதி இந்த படம் பெரிசா வரப்போவதாக தோன்றுகிறது. நான் திங்கட்கிழமைக்கு மேல் ஊட்டியில் இருப்பேன் ஊட்டி வாங்க கதை சொல்ல என்றார். நானும் ஊட்டிக்கு சென்று கதை சொன்னேன். இரண்டு மணிநேரம் கதைகேட்ட பின்னர் பாரதி இந்த படத்தில் நிறைய ரத்தம் தெறிக்கிற மாதிரி தோன்றுகிறது. கதையை சேஞ்ச் செய்யலாம் என்று சொன்னார்.நானும் தயாரிப்பாளரிடம் கேட்டு சொல்கிறேன் என்றேன். தயாரிப்பாளர் அதற்குள் நடிகர் கார்த்திக் பற்றி விசாரித்துவிட்டா என்று நினைக்கிறேன். கால் செய்து பாரதி கண்ணன், கார்த்திக் பற்றி விசாரித்தேன், அவர் படப்பிடிப்பு சரியாக வரமாட்டார் என்று சொல்கிறார்கள். கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிக் கொண்டு வாங்கள் என்றார். நானும் கார்த்திக்கிடம் சென்று கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டேன். கார்த்திக் என்னிடம் காசு கொடுத்தால் திருப்பி வராது என்று சினிமா துறைக்கே தெரியும் உங்களுக்கு தெரியாதா என்றார். அதன்பிறகு, அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் சென்று கார்த்திக் பணம் வாங்கி கொண்டு தரவில்லை என்றேன். அவர் ஏற்கனவே ஒரு 6 தயாரிப்பாளர்கள் புகார் சொல்லியிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை வாங்கள் கார்த்திக்கையும் வரச்சொல்லி பேசி முடித்துவிடுவோம் என்றார். நாங்களும் விஜயகாந்த் சொன்னது போல சொன்றோம். மதியம் 3 மணிக்கு வந்தார். ஒரு பேப்பரில் டேட் எழுதி காஜா மைதீனிடம் கொடுத்தார். காஜா மைதீன் கடுப்பாகி நாற்காலியை எடுத்து அடிக்க சென்றுவிட்டார். கார்த்திக் மார்க்கெட்டை அவரே கெடுத்துக் கொண்டார்” என்றார்.
