Connect with us

விளையாட்டு

உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி – ரூ.51 கோடி பரிசுத் தொகை அறிவித்த பி.சி.சி.ஐ

Published

on

bcci

Loading

உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி – ரூ.51 கோடி பரிசுத் தொகை அறிவித்த பி.சி.சி.ஐ

இந்தியாவில் நடைபெற்ற 13-வது மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில், தங்களது முதலாவது உலகக் கோப்பைக்காக இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தியது. அதில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் கோப்பை முத்தமிட்டு சாதனை படைத்தது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்தது. சதம் அடித்த கையோடு வோல்வார்ட் 101 ரன்களில் (98 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) சிக்கினார். அவர் தூக்கியடித்த பந்தை அமன்ஜோத் கவுர் தட்டுத்தடுமாறி பிடித்தார். அவர் வீழ்ந்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது. அப்போதே உலகக் கோப்பை கைக்கு வந்தது போல் கொண்டாடினர். எஞ்சிய விக்கெட்டையும் நமது பவுலர்கள் கபளீகரம் செய்து தென்ஆப்பிரிக்காவை 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது. 52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்தென்னாப்பிரிக்க அணியின் வீரர்களான தஸ்மின் பிரிட்ஸ் (23 ரன்), அன்னெகே பாஷ் (0), சுனே லுஸ் (25 ரன்), மரிஜானே காப் (4 ரன்), விக்கெட் கீப்பர் சினலோ ஜாப்தா (16 ரன்) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளியில் நடையை கட்டினர். ஆனால் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான லாரா வோல்வார்ட் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு மிரட்டினார். இந்தியாவின் சுழல் ஜாலத்தை திறம்பட சமாளித்த அவர் சதத்தை நோக்கி துரிதமாக பயணித்தார். இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது மதில் மீது பூனையாக தெரிந்தது. 6-வது விக்கெட்டுக்கு அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அன்னெரி டெர்க்சென்னை 35 ரன்னில் தீப்தி ஷர்மா வீழ்த்தினார். ஆனால் இந்திய பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த லாரா வோல்வார்ட் தனது 11-வது சதத்தை எட்டினார். மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத் தொகையை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐ.சி.சி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன