Connect with us

பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 9: பார்வதியை மிஞ்சும் திவ்யா; முதல்நாளே வெடித்த மோதல்!

Published

on

divya parvathi

Loading

பிக்பாஸ் சீசன் 9: பார்வதியை மிஞ்சும் திவ்யா; முதல்நாளே வெடித்த மோதல்!

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை வெடித்து வருகிறது. வி.ஜே.பார்வதி, திவாகர், கம்ருதீன், அரோரா, பிரவீன் ராஜ், ரம்யா ஜோ, சபரி, சுபிக்‌ஷா உட்பட 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே, ஆதிரை மற்றும் கலையரசன் ஆகியோர் வரிசையாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது வி.ஜே.பார்வதி தான் என்று கூறப்படுகிறது. அவர் இல்லாமல் இந்த 28 நாட்களில் ஒரு ப்ரொமோ கூட வந்ததில்லை. பெரும்பாலான ப்ரொமோக்கள் பார்வதியை வைத்து தான் வருகின்றன. பிக்பாஸ் ரசிகர்களே என்னடா இது சும்மா சண்டையா போட்டுக்கிட்டு இருக்காங்க என்ற லெவலில் பேச ஆரம்பித்துவிட்டார். இதையடுத்து, போட்டியை விறுவிறுப்பாகும் விதமாக பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கினார்.வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே சென்ற சாண்ட்ரா, பிரஜின், திவ்யா கணேஷ், அமித் ஆகியோர் ஏற்கனவே இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் வெளியில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறினார்கள். பொதுவாக அனைவருமே பார்வதியை டார்க்கெட் செய்துதான் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி இத்துடன் பிரச்சனை ஓய்ந்து புதிதாக எதாவது நடக்கும் என்று மக்கள் நினைத்த நிலையில் தற்போது பார்வதி மற்றும் திவ்யா கணேஷ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று ட்ரோலாகி ஃபயர் பிரதர்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 29-ஆம் நாளின் முதல் ப்ரொமோ ஏற்கனவே வெளியாகியுள்ளது. இதில், வி.ஜே.பார்வதி, வைல்டு கார்டு போட்டியாளர்களை வெளுத்து வாங்கும்விதமாக இப்படி செய்யக் கூடாது அப்படி செய்யக் கூடாது என்று பிரஜின் மற்றும் சாண்ட்ரா சொன்னாங்க. ஆனால், அவங்க என்ன செய்றாங்க கொசு அடிக்கிற மாதிரி நம்மள கிண்டல் செய்றாங்க. திவ்யா நீங்க பண்ணுனதா நாங்க பாத்துட்டோம் பாக்குறதுக்கு எதுவும் இல்ல என்று சொன்னாங்க. நீங்க யாரு அத சொல்றதுக்கு, இங்க எது பண்ணனும் எது பண்ணக் கூடாது என்று எனக்கு தெரியும். இந்த சொசைட்டில நாளு பேர் நாளு விதமாக பேசுவாங்கனு சொல்லுவாங்கல்ல அந்த நாளு பேர் நீங்கதான் என்று வைல்டு கார்டு போட்டியாளர்களை குறிப்பிட்டு சொல்கிறார். இதனுடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் தலைவர் பதவி திவ்யா கணேஷிடம் உள்ள நிலையில் ஹவுஸ் மேட்ஸ் டீம் பிரிக்கும்போது சண்டை நடந்துள்ளது. வீட்டிற்குள் உள்ள அனைவரும் சமாதனம் செய்தும் அதுமட்டுமின்றி வைல்ட்கார்டில் இருந்து வந்த பிரஜின், சாண்ட்ரா, அமீத் ஆகியோர் சமாதானம் செய்ய முயற்சித்தும் பார்வதி மற்றும் திவ்யா சண்டையிட்டு கொண்டிருந்தனர். இது பார்ப்பவர்களுக்கு வைல்டுகார்ட் வைத்தும் மீண்டும் மீண்டும் சண்டைகள்தான் நடக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன