Connect with us

வணிகம்

Gautam Adani | லஞ்சப் புகாரில் பிடிவாரண்ட்.. ஒரு மணிநேரத்தில் மிகப்பெரிய சரிவை கண்ட அதானி குழுமம்!

Published

on

Loading

Gautam Adani | லஞ்சப் புகாரில் பிடிவாரண்ட்.. ஒரு மணிநேரத்தில் மிகப்பெரிய சரிவை கண்ட அதானி குழுமம்!

ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சப் புகாரில் கவுதம் அதானி உட்பட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

Advertisement

Also Read: 
“குற்றம் நிரூபணம் ஆகும் வரை நாங்கள் நிரபராதிகள்..” – ஊழல் புகாரில் அதானி குழுமம் விளக்கம்

அதில், இந்தியாவில் சூரிய மின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர அதானி முன்வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைகேடாகப் பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு முதல், இந்திய அதிகாரிகளை அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கவுதம் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

பங்குச்சந்தையில் சரிவு:

Advertisement

அமெரிக்காவில் அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் சுமார் 20 விழுக்காடு வரை சரிந்தன.

இதில், அதிகபட்சமாக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட அதானி பசுமை ஆற்றல் (கிரீன் எனெர்ஜி) நிறுவனத்தின் பங்குகள் 16 சதவிகிதம் சரிந்தது.

இதேபோன்று, அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் 14 விழுக்காடு, அதானி துறைமுகத்தின் பங்குகள் 8 விழுக்காடு சரிவுடன் வணிகம் தொடங்கியது. இப்படியாக ஒரு மணி நேரத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை அதானி குழும நிறுவனங்கள் இழந்தது என்று கூறப்படுகிறது.

Advertisement

முன்னதாக, அமெரிக்காவில் இருந்து திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய பங்குச்சந்தைகளுக்கு அதானி குழுமம் கடிதம் அனுப்பியுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அதானி குழுமம், அங்கிருந்து திரட்டப்பட்ட நிதியைத் தங்கள் நிறுவனம் பயன்படுத்தாது என்று விளக்கம் அளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன