இந்தியா
Exclusive | திடீர் மாற்றம்… வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? – தனியார் வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்

Exclusive | திடீர் மாற்றம்… வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? – தனியார் வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்
மாதிரி படம்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ஆம் தேதியன்று இலங்கை – தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
புதன்கிழமையன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று வியாழக்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உட்பட 13 மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ் 18க்கு அவர் அளித்த பேட்டியில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் சென்னையில் வெப்பச்சலனத்தை பொறுத்தே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
அதே நேரம் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் எனவும் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.