Connect with us

தொழில்நுட்பம்

’சாட்ஜிபிடி கோ’ ஒரு வருடம் இலவசம்; இந்திய பயனர்களுக்கு சலுகை அறிவித்த ஓபன் ஏ.ஐ

Published

on

ChatGPT Go Free OpenAI India Offer ChatGPT Free for 1 Year ChatGPT Subscription Free

Loading

’சாட்ஜிபிடி கோ’ ஒரு வருடம் இலவசம்; இந்திய பயனர்களுக்கு சலுகை அறிவித்த ஓபன் ஏ.ஐ

பிரபல ஏ.ஐ. சாட்போட் ஆன சாட்ஜிபிடி-ஐ (ChatGPT) உருவாக்கிய நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) இந்தியச் சந்தையில் தங்கள் இருப்பை விரிவாக்கும் நோக்கில் நடைபெற்ற அதன் முதல் ‘DevDay Exchange’ நிகழ்வில், சாட்ஜிபிடி கோ (ChatGPT G)o சந்தாவை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குவதாக மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியச் சந்தையில் தங்கள் இருப்பை வலுப்படுத்த ஓபன்ஏஐ (OpenAI) விரும்புவதைக் காட்டுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியப் பயனர்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி கோ( ChatGPT Go) என்பது, பட்ஜெட்டுக்கு ஏற்ற சந்தா திட்டமாகும். ஜிபிடி-5 (GPT-5) போன்ற மேம்பட்ட ஏ.ஐ. கருவிகளை, குறைந்த செலவில் அணுக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.சாட்ஜிபிடி கோ-வின் சிறப்பம்சங்கள் என்னென்ன?இலவசமாக வழங்கப்பட உள்ள இந்த சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) திட்டத்தில் கிடைக்கும் பலன்கள், ஏஐ பயனர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.இந்தத் திட்டமானது மேம்படுத்தப்பட்ட ஜிபிடி-5 மூலம் இயங்குகிறது.இந்திய மொழிகளுக்கான (Indic languages) மேம்பட்ட ஆதரவு இதில் உள்ளது.சாதாரண பயனர்களைவிட, 10 மடங்கு அதிக செய்தி வரம்பு (Message Limits) இதில் கிடைக்கிறது.பயனரின் உரையாடல்களை நினைவில் வைத்து, இன்னும் தனிப்பயனாக்கப்பட்ட பதில்களை வழங்க இது இரு மடங்கு அதிக மெமரியைக் கொண்டுள்ளது.தினசரி படங்களை உருவாக்குதல் (Image Generations) மற்றும் கோப்புகள்/படங்களைப் பதிவேற்றுவதற்கான (File and Image Uploads) வசதியும் இதில் உள்ளது.சலுகையைப் பெறுவது எப்படி? (இலவசமாக அப்கிரேட் செய்யுங்கள்!)இந்தச் சலுகை புதிய மற்றும் ஏற்கனவே சாட்ஜிபிடி (ChatGPT) பயன்படுத்தும் பயனர்கள் இருவருக்கும் பொருந்தும். நீங்கள் இந்தியாவில் இருந்தால், நல்ல நிலையில் உள்ள ஓபன் ஏஐ (OpenAI) கணக்கைக் (நிலுவையில் உள்ள கட்டணம் இல்லாத கணக்கு) கொண்டிருந்தால், இந்தச் சலுகையைப் பெறலாம்.இலவச சலுகையைப் பெறுவதற்கான வழிமுறைகள்:நீங்கள் சாட்ஜிபிடி (ChatGPT) இணையப் பக்கத்திற்குச் செல்லலாம் அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு செயலியைத் திறக்கலாம்.அப்டேட் செய்யுங்கள்:இணையப் பயனர்கள் “Try ChatGPT Go” பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.ஆண்ட்ராய்டு பயனர்கள், திரையில் தோன்றும் “Upgrade to Go for Free” ஆப்ஷனைத் தட்ட வேண்டும். (அல்லது முகப்புத் திரையில் உள்ள “Try Go” என்ற பட்டன் மூலம் அல்லது ஆப் செட்டிங்ஸ் மூலமும் பெறலாம்.)கட்டண முறையைச் சேர்க்கவும்: நீங்கள் இன்னும் கட்டண முறையைச் சேர்க்கவில்லை என்றால், அதைப் பதிவு செய்ய வேண்டும். (சலுகையைச் செயல்படுத்த, UPI மூலம் Re 1 அல்லது கிரெடிட் கார்டு மூலம் Rs 2 தற்காலிகமாகக் கட்டணமாக வசூலிக்கப்படலாம்).வெற்றிகரமாகப் பதிவு செய்ததும், உங்களுக்கு ஓராண்டுக்கு (12 மாதங்களுக்கு) சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) இலவசமாகக் கிடைத்துவிடும். ஏற்கனவே பணம் செலுத்துபவர்கள் என்ன செய்ய வேண்டும்?சந்தா நீட்டிக்கப்படும்: நீங்கள் ஏற்கனவே (ChatGPT Go, Pro அல்லது Plus) சந்தாவை இணையம் அல்லது (Google Play Store) மூலம் செலுத்திப் பயன்படுத்தினால், உங்கள் சந்தாவை ரத்து செய்யத் தேவையில்லை. நீங்கள் சலுகையைப் பெற்றவுடன், உங்கள் பில்லிங் தேதி தானாகவே 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, ஓராண்டு இலவச அணுகல் கிடைக்கும்.ஆப்பிள் பயனர்கள்: (Apple App Store மூலம்) சந்தா செலுத்தியவர்கள், தங்கள் சந்தாவை ரத்து செய்து, பில்லிங் காலம் முடியும் வரை காத்திருந்து, அதன் பிறகு இந்தச் சலுகையில் இணைய வேண்டும்.முக்கியக் குறிப்பு: இந்தச் சலுகை “வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே” கிடைக்கும் என்று ஓபன் ஏஐ (OpenAI )அறிவித்துள்ளது, ஆனால் அது எப்போது முடிவடையும் என்ற தேதியை இன்னும் வெளியிடவில்லை. சலுகை நீடிக்காது என்பதால், பயனர்கள் உடனே இதைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன