பொழுதுபோக்கு
விசாரணை படம் பார்த்து தூக்கத்தை தொலைத்த ஜெர்மன் இயக்குனர்; 20 ஆண்டுக்கு பின் அவரை பிரமிக்க வைத்த வெற்றிமாறன்
விசாரணை படம் பார்த்து தூக்கத்தை தொலைத்த ஜெர்மன் இயக்குனர்; 20 ஆண்டுக்கு பின் அவரை பிரமிக்க வைத்த வெற்றிமாறன்
உதவி இயக்குனராக இருந்த சமயத்தில் ஒரு படத்தை பார்த்து அன்று இரவு நான் தூங்கவே இல்லை. இது பல நாட்கள் நீடித்தது. அதன்பிறகு சில வருடங்கள் கழித்து நான் இயக்கிய படத்தை பார்த்து அந்த இயக்குனரே இன்று என்னால் தூங்க முடியாது என்று சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது என வெற்றிமாறன் கூறியுள்ளார். இயக்குனர் பாலுமகேந்திராவிடம உதவி இயக்குனராக இருந்து தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படமே பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், அடுத்து தனுஷ் நடிப்பில் ஆடுகளம் படத்தை இயக்கினார். இந்த படம் தனுஷ் – வெற்றிமாறன் இருவருக்குமே தேசிய விருது பெற வழி செய்தது. பொல்லாதவன், ஆடுகளம் என இரு படங்களுக்கு 4 வருட இடைவெளி உள்ளது. ஆடுகளம் வெளியாகி 5 ஆண்டுகள் கழித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் தான் விசாரணை, காவல்துறை விசாரணை எப்படி இருக்கும் என்பதின் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டு காட்டிய இந்த படத்தில் சமுத்திரக்கனி, அட்டக்கத்தி தினேஷ் முக்கிய கேரக்டரில் நடிததிருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தேசிய விருதையும் பெற்று அசத்தியது.இந்த படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறன், ஜெர்மனியை சேர்ந்த வார்னர் ஹார்சாக் (Werner Herzog) என்ற ஒரு இயக்குனர் இருக்கிறார். அவரின் அக்குவையர் ராத் ஆஃப் காட் (Aguirre, the Wrath of God) என்ற ஒரு படம் இருக்கிறது. இந்த படத்தை 1999-2000 இடையில் ஃபிலிம் சேம்பரில் போடும்போது பார்த்தேன். இந்த படத்தை பற்றி ஒரு ரத்திரி முழுக்க, பேசிக்கொண்டே இருந்தோம். பல நாட்கள் பேசியிருக்கிறேன். எனது படம் விசாரணை ஆஸ்கார் விருதுக்கு போனபோது, வெளிநாட்டு மொழி திரைப்படங்களுக்கு வாக்களிக்கும் உறுப்பினர் அவர். அப்போது எல்லோரும் அவரை எதுக்காக கூப்பிட்டீங்க. படம் பிடிக்கலான எழுந்து போய்விடுவாரே, அப்படி சென்றுவிட்டால் பிரச்சனை ஆகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால் அவர் முழு படத்தையும் பார்த்தார். பார்த்துவிட்டு. இன்று இரவு என்னால் தூங்க முடியாது என்று சொன்னார். அவரை பார்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் படத்தை பார்த்து நானும் தூங்கவில்லை என்று சொன்னதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.
