இலங்கை
நல்லூர். உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் கைது!
நல்லூர். உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் கைது!
நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த, நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோண்டாவில் பகுதியில் வைத்து நேற்றய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
