Connect with us

தொழில்நுட்பம்

1,000 கோடி ஆண்டு பழமையான வால் நட்சத்திரம்… இந்த நவம்பரில் காணத்தவறாதீர்கள்!

Published

on

Interstellar comet 3I_ATLAS

Loading

1,000 கோடி ஆண்டு பழமையான வால் நட்சத்திரம்… இந்த நவம்பரில் காணத்தவறாதீர்கள்!

கற்பனை செய்து பாருங்க. நமது சூரிய மண்டலம் பிறப்பதற்கு முன்பே, சுமார் 1,000 கோடி (10 பில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உருவான பனிக்கட்டிப் பாறை, இன்று நமது பூமிக்கு மிக அருகில் வந்துள்ளது. ஆம்! 3I/அட்லஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த “நட்சத்திர மண்டல” (Interstellar) வால் நட்சத்திரம், நமது சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததல்ல. இது வேறொரு நட்சத்திர மண்டலத்திலிருந்து பல்லாயிரம் ஆண்டுகள் பயணம் செய்து நம்மைக் காண வந்துள்ள ஒரு அரிய விருந்தாளி.கடந்த சில வாரங்களாக இந்த வால் நட்சத்திரம் நம்மால் பார்க்க முடியாதபடி, சூரியனுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தது. கடந்த வாரம், அது சூரியனுக்கு மிக நெருக்கமான தனது சுற்றுப்பாதைப் புள்ளியை வெற்றிகரமாகக் கடந்து, இப்போது சூரியனின் மறுபக்கத்திலிருந்து வெளி வந்துள்ளது. நாம் இப்போது இந்த மர்ம விருந்தாளியைப் பார்க்கலாம்.எப்படி, எங்கே, எப்போது பார்ப்பது?நவம்பர் மாதம்தான் இந்த வால் நட்சத்திர பார்ப்பதற்கு சிறந்த நேரம். இது மிகவும் மங்கலானது (Magnitude 10), எனவே வெறும் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், சாதாரண தொலைநோக்கி (Telescope) அல்லது உயர்தர பைனாகுலர்கள் போதுமானது. சூரியன் உதிப்பதற்குச் சற்று முன்பு, அதிகாலை நேரங்களில். சூரிய உதயத்திற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு இது வானில் தோன்றும். குழப்பமாக இருந்தால், SkySafari, Stellarium, அல்லது Sky Tonight போன்ற ஒரு ‘Stargazing’ செயலியை (App) பயன்படுத்துங்க. சூரியனைக் கடந்த பிறகு அதன் பிரகாசம் மாறக்கூடும். எனவே, இதைப் பிடிக்க இதுவே உங்களுக்குக் கிடைக்கும் சிறந்த வாய்ப்பாக இருக்கலாம்.இந்த வால் நட்சத்திரம் வானில் தொடுவானத்திற்கு மிக அருகில் (low on the horizon) இருப்பதால், பெரிய தொழில்முறை வானாய்வுக் கூடங்களால் (Professional Observatories) இதைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. இதுவே அமெச்சூர் வானியலாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. நீங்க எடுக்கும் புகைப்படங்கள், இந்த வால் நட்சத்திரத்தின் கலவை மற்றும் பாதையைக் கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவும் விலைமதிப்பற்ற அறிவியல் டேட்டாவாக மாறும். செட்டி (SETI) நிறுவனம் மற்றும் யூனிஸ்டெல்லரின் (Unistellar) 25,000 குடிமக்கள் வானியலாளர்கள் கொண்ட குழு, நமது சூரிய மண்டலத்திற்கு வெளியிலிருந்து வந்த இந்த விருந்தாளியை ஆய்வு செய்ய உள்ளனர்.உங்க பகுதியில் வானிலை மேகமூட்டமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். ‘மெய்நிகர் தொலைநோக்கித் திட்டம்’ (The Virtual Telescope Project) வரும் வாரங்களில் இந்த வால் நட்சத்திரத்தின் பயணத்தை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது. பிரபஞ்சத்தின் ஆழத்தில் இருந்து வந்துள்ள இந்த 1,000 கோடி வருடப் பழமையான பயணியைக் காணத் தயாராகுங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன