பொழுதுபோக்கு
மாதம்பட்டி ரங்கராஜ் கைது ஆவாரா? தமிழ்நாடு மகளிர் ஆணையம் பரிந்துரை முழு விவரம்
மாதம்பட்டி ரங்கராஜ் கைது ஆவாரா? தமிழ்நாடு மகளிர் ஆணையம் பரிந்துரை முழு விவரம்
தமிழ் திரையுலகில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ் ‘பென்குயின்’ போன்ற சில திரைப்படங்களில் நடித்தார். அடிப்படையில் சமையல் கலைஞரான இவர் பிரபலங்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு சமையல் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்பவரை திருமணம் செய்த நிலையில் அந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.சமீபத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வைத்தார். அவர்களது திருமணம் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை ஜாய் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. இதையடுத்து ஜாய் கிரிசில்டா காவல் ஆணையர் அலுவலகம், மகளிர் ஆணையம் என பல இடங்களில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல், மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிசில்டாவும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை மாதம்பட்டி ரங்கராஜ் சாயலில் இருப்பதாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, மகளிர் ஆணையத்தின் விசாரணையின் போது மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவை தான் திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் அந்த குழந்தைக்கு நான் தான் தந்தை என்று தெரிவித்ததாகவும் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழ்நாடு மகளிர் ஆணையம், பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். குமாரி, நேற்று (நவ.11) சென்னை பெருநகர காவல் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா? என பலரும் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
