Connect with us

பொழுதுபோக்கு

‘குழந்தை என்னுடையது என நிரூபித்தால்’… அறிக்கையில் ட்விஸ்ட் வைத்த மாதம்பட்டி ரங்கராஜ்

Published

on

Joy Madhampatty

Loading

‘குழந்தை என்னுடையது என நிரூபித்தால்’… அறிக்கையில் ட்விஸ்ட் வைத்த மாதம்பட்டி ரங்கராஜ்

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவர், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா பிரச்சனை தான் இணையத்தில் பேசுப்பொருளானது. சமீபத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய விசாரணையின் போது ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவரது குழந்தை தன்னுடையது என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டதாக ஜாய் கிரிசில்டா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், ஜாய் கிரிசில்டா பதிவிற்கு மறுப்பு தெரிவித்து மாதம்பட்டி ரங்கராஜ் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக  திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.செப்டம்பர் 2025-ல், ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.A post shared by T.P.Rangharaaj (@madhampatty_rangaraj)கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது பி.எம்.டபிள்யூ காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர இ.எம்.ஐ-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டி.என்.ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் (DNA Test) அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன்.இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன