Connect with us

இலங்கை

வீதிப்பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி!

Published

on

Loading

வீதிப்பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி!

வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம்  2025-2026 இனை  நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை முன்மொழிவுக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீதிவிபத்துக்கள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் எமது நாட்டில் இறப்பு விகிதம் 10,000 இற்கு 11.2 ஆகப் பதிவாகியுள்ளது. குறித்த வீதிப் பாதுகாப்புக்கான இரண்டாவது உலகளாவிய குறிகாட்டி (2021-2030) மூலம் விதந்துரைக்கப்பட்டுள்ள மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்றுள்ள பாதுகாப்பு எல்லையைக் கடந்துள்ளது.

Advertisement

பொலிஸ் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் அறிக்கைகளுக்கமைய, கடந்த 2020-2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது நாட்டில் 118,697 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், குறித்த விபத்துக்களால் 12,322 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்,பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காரணமாக 400 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, குறித்த நோக்கங்களுடன் ‘வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025-2026)’ இனை அமுல்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன