சினிமா
மிரட்டி கல்யாணம் பண்ணினேனா..மாத்திமாத்தி பேசுறாரு!! ஜாய் கிரிஸில்டா..
மிரட்டி கல்யாணம் பண்ணினேனா..மாத்திமாத்தி பேசுறாரு!! ஜாய் கிரிஸில்டா..
தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் எங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது என்றும் ஜாய் கிரிஸில்டா இணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படங்களை வெளியிட்ட சில வாரங்களில் தன்னை ஏமாற்றிவிட்டார் ரங்கராஜ் என்று புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினர் கிரிஸில்டா.இதுகுறித்த வழக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், ஜாய் கிரிஸில்டாவின் குழந்தை நான் தான் என்று விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்ததாக தகவல் வெளியானது.இன்று மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம், மிரட்டலின் பேரில் நடந்தது என்று குறிப்பிட்டார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிஸில்டா, அவர் கொடுத்த அறிக்கை எல்லாம் பொய்யானது. உள்ளே விசாரணையில் ஒன்று பேசுகிறார், வெளியே வந்து வேறுமாதிரி மாத்தி மாத்தி பேசுகிறார், என்பது எனக்கு புரியவில்லை. பணபலம் இருக்கிறது என்று அரசு அதிகாரியை கேள்வி கேட்கிறார். விசாரணையில் நான் தான் அப்பா என்று ஒப்புக்கொண்டார். அங்கு ஜாய் நல்லா பார்த்துக்கொண்டார் என்று என்னை புகழ்ந்து பேசினார்.நான் மகளிர் ஆணையத்திடம், அவரது குடும்பம் இது அவர் குழந்தை இல்லை என்று வதந்திகளை பரப்புகிறார்கள். எனக்கு ஒரு கிளாரிட்டி வேண்டும், டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கணும் என்றேன். மிரட்டி திருமணம் செய்து கொள்வதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் என்ன குழந்தையா? .அதற்கு அவர் அந்த மேடம் முன், டி என் ஏ டெஸ்ட் வேண்டாம் என்று அவர் தான் சொன்னார், இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறேன். இப்போது டெலீவரி ஆகி 4 நாட்கள் தான் ஆகிறது, நிற்கமுடியவில்லை என்று ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.
