பொழுதுபோக்கு
இந்த படத்தை தனியா பாக்காதீங்க, அல்லு விட்ரும்; பல நாடுகளில் தடை, ஆஸ்கார் விருது பெற்ற ஒரே ஹாரார் படம்!
இந்த படத்தை தனியா பாக்காதீங்க, அல்லு விட்ரும்; பல நாடுகளில் தடை, ஆஸ்கார் விருது பெற்ற ஒரே ஹாரார் படம்!
பொதுவாக திரைப்படங்கள் பார்ப்பது பொழுதுபோக்காக இருந்த காலக்கட்டம் போய், இப்போது சினிமா பார்ப்பரையே பலர் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார்கள். வித்தியாசமான படங்களை பார்த்து இந்த படம் எப்படி இருந்தது என்று தங்களது கருத்துக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதில் வயது வந்தோருக்கான படம், காதல். ஆக்ஷன், காமெடி, குடும்ப திரைப்படங்களை பார்க்கும்போது அந்தந்த மனநிலையில் இருப்பார்கள். இந்த மாதிரியான திரைப்படங்களை தனியாக கூட பார்க்கலாம். ஆனால் திகில் திரைப்படங்களை தனியாக பார்க்கும் தைரியம் பலருக்கும் இருக்காது. குறிப்பாக இந்த படங்களை நீங்கள் தனியாக பார்த்தால், இவ்வளவு ரூபாய் தரப்படும் என்று பந்தயம் வைக்கும அளவுக்கு கூட, அதிக பயம் தரும் திகில் படங்கள் அதிகம் உள்ளன. அதிகம் திகில் இருப்பதன் காரணமாக சில படங்கள் பல நாடுகளில் தடை செய்யப்படும் அளவுக்கு கூட சென்றுள்ளது. அந்த வகையில், ஒரு பயங்கரமான திகில் படத்தை பற்றி பார்ப்போமா?உலகளவில் ரசிகர்கள் ஹாலிவுட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பலரும அறிந்த ஒன்று. தமிழ் சினிமாவில் இன்று அதிகம் தொடப்படும் கதைக்களங்கள். பல வருடங்களுக்கு முன்பே ஹாலிவுட்டில் வந்த கதையாக இருக்கும் வகையில், ஹாலிவுட் படங்கள் இந்தியா மட்டும் இல்லாமல லக அரங்கில் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. ஆனாலும் சில சமயங்களில் யாரும் தொடாத ஒரு கதைக்களத்தில் வெளியாகும் படங்கள் பலரின் கவனத்தை ஈர்க்கவும தவறியதில்லை. அந்த வகையில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு திரைப்படம், ஐ.எம்.டி.பி.யில் 8.2 ரேட்டிங் பெற்ற இந்த படம் ஆஸ்கார் விருதை வென்ற ஒரே திகில் படம் ‘தி எக்ஸார்சிஸ்ட்’ (The Exorcist). அதிகமான அதே சமயம் ஆழமான திகில் காட்சிகள் காரணமாக இந்த படம் பல நாடுகளில தடை செய்யப்பட்டது. ஆனாலும் பல ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்துள்ளது. 1973-ம் ஆண்டு வெளியான இந்த ‘தி எக்ஸார்சிஸ்ட்’ திரைப்படம் வில்லியம் பீட்டர் பிளாட்டியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.அதேபோல் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படும் நிலையில், 1970 காலக்கட்டத்தில், அமெரிக்காவில் வெறும் 25 திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து, இந்த படத்தை திரையிட பல திரையரங்குகள் முன்வந்தன. படத்தை விரும்பி பார்த்த ரசிகர்கள் கூட திகில் காட்சிகளில் தங்கள் அலறல் சத்தமும் கேட்டுள்ளது. ‘தி எக்ஸார்சிஸ்ட்’ உலகின் மிகப்பெரிய திரைப்பட விருதான ஆஸ்கர் விருது பெற்ற முதல் மற்றும் ஒரே திகில் படமாக மாறியது. தற்போது இந்தப் படத்தை அமேசான் பிரைமில் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடுதல் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.
