Connect with us

பொழுதுபோக்கு

படுக்கை முழுவதும் ரத்தம், தொடையில் கடித்த முன்னாள் காதலன்; வழக்கை நடத்த உதவி கேட்கும் பிரபல சீரியல் நடிகை!

Published

on

Jaseela Parveen

Loading

படுக்கை முழுவதும் ரத்தம், தொடையில் கடித்த முன்னாள் காதலன்; வழக்கை நடத்த உதவி கேட்கும் பிரபல சீரியல் நடிகை!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நடிகையும், மாடலும், ‘ஸ்டார் மேஜிக்’ கேம் ஷோவின் போட்டியாளருமானவர் ஜஸீலா. தற்போது, சமூக ஊடகங்கள் மூலம் இவர் தனது முன்னாள் காதலனுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்டுள்ள பதிவு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. தான் அனுபவித்த உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களைப் பற்றி விளக்கும் ஒரு நீண்ட பதிவையும் ஜஸீலா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.இந்த செய்தியை மலையாளத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இதில், “பரிதாபத்திற்காக அல்ல, ஆதரவும் வழிகாட்டுதலும் தேவைப்படுவதால்தான் நான் கடந்து செல்லும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, எனது அப்போதைய காதலனான டான் தாமஸ் வித்தையத்திலுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அவரது அதீத குடிப்பழக்கம், புகைபிடித்தல் மற்றும் நடத்தை குறித்துப் பேசியபோதுதான் சண்டை ஆரம்பித்தது.  அந்த வாக்குவாதத்தின் போது அவர் வன்முறையில் ஈடுபட்டார். எனது வயிற்றில் உதைத்தார், முகத்தில் குத்தினார், தரையில் விழுந்த எனது தலையைத் தரையில் முட்டினார், என்னை இழுத்துச் சென்றார், அக்குள் மற்றும் தொடைகளில் கடித்தார்.உலோக வளையல் கொண்டு என் முகத்தில் பலமாகத் தாக்கியதில் எனது மேல் உதட்டில் காயம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு நான் அழுது கெஞ்சினேன், ஆனால் அவர் கேட்கவில்லை. நான் போலீஸை அழைக்க முயன்றபோது எனது தொலைபேசியைப் பறித்துக் கொண்டார். பின்னர், அவரே என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு வந்தபோது, நான் படிக்கட்டிலிருந்து விழுந்துவிட்டதாக மருத்துவர்களிடம் பொய் சொன்னார். பின்னர் என்னை சன்ரைஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு எனக்குப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவர் என்னைக் கவனிக்கவில்லை. துன்புறுத்தல் மீண்டும் தொடர்ந்தது. நான் தனிமையில் இருந்தேன், வேதனையில் இருந்தேன், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உடைந்துபோனேன். அதனால் நான் ஆன்லைனில் போலீஸில் புகார் அளித்தேன். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஜனவரி 14 அன்று நான் நேரடியாகப் புகார் அளித்தேன். அப்போதும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்த பின்னர்தான் போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. அன்று முதல் வழக்கு நடந்து வருகிறது. தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனது காயம் கடுமையானது. ஆதாரங்களும் மருத்துவ ஆவணங்களும் தெளிவாக உள்ளன. ஆனால் எதிர்தரப்பினர், நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாத ஒரு சமரசத்தைக் கூறி, வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.பல மாதங்களாக அவர்கள் மீண்டும் கால அவகாசம் கேட்டு தாமதப்படுத்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில் என்னால் வழக்கறிஞரை நியமிக்க முடியாததால் நான் தனி ஆளாக ஆஜராகிறேன். விசாரணை நடந்தபோது, எனக்குப் பேசக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. நீதிமன்ற அறைக்குள் நான் யார் கண்ணுக்கும் தெரியாதவளாக உணர்ந்தேன். எனக்கு ஏற்பட்டது ஒரு சிறிய காயம் அல்ல. அது கொடுமையான தாக்குதல். ஒரு கலைஞராக என் முகம்தான் என் அடையாளம். மாதக்கணக்கில் என்னால் வேலை செய்ய முடியவில்லை. உடல் மற்றும் மன அதிர்ச்சி, சிகிச்சை, நிதி இழப்பு, மனச்சோர்வு ஆகியவற்றின் மூலம் நான் கடந்து சென்றேன். அதே நேரத்தில், இதைச் செய்தவர் தனது வாழ்க்கையைத் தொடரவும், மூத்த வழக்கறிஞர்களை நியமித்து நடைமுறைகளைத் தாமதப்படுத்தவும் செய்கிறார்.A post shared by Jaseela parveen (@jaseela_parveen)நான் கேட்பது இதுதான், வழக்கை விசாரணைக்கு அனுப்புங்கள். ஆதாரங்கள் பேசட்டும். உண்மை கேட்கப்படட்டும். தேவைப்பட்டால் எனது வழக்கை நானே வாதிடவும் நான் தயாராக இருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும். வழக்கை ரத்து செய்வதற்கான மனுவை தள்ளுபடி செய்வதும், வழக்கை விசாரணைக்கு நகர்த்துவதும் எப்படி என்று ஏதாவது ஒரு வழக்கறிஞர் எனக்கு வழிகாட்ட முடியுமானால் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். தயவுசெய்து எனக்கு ஆதரவாக நில்லுங்கள். இது ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்காகவும் எனது போராட்டம். அமைதிப்படுத்தப்பட்ட எனக்காக மட்டுமல்ல, இந்த அமைப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும். நன்றி, என்று ஜஸீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.சின்னத்திரை துறையில் தீவிரமான பிறகுதான் ஜஸீலா கேரளாவில் குடியேறியதும், மலையாளம் பேசத் தொடங்கியதும். உடற்தகுதி ஆர்வலரான ஜஸீலா, சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இந்தப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ஜஸீலாவுக்குப் பலரின் ஆதரவையும் பெற்றுத் தந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன