இலங்கை
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை இடம்பெறும்!
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை இடம்பெறும்!
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நாளை (07) நடைபெற உள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை பிற்பகல் இரண்டாவது முறையாக ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வாசிப்பார்.
அதன்படி, வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி தொடங்கி 6 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
குழு நிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி தொடங்கி 17 நாட்களுக்கு நடைபெறும். மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
