இலங்கை
யாழில் காணாமல் போன பெண் பிள்ளை ; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
யாழில் காணாமல் போன பெண் பிள்ளை ; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
யாழ்ப்பாணத்தில் தமது மகளை காணவில்லை என சுன்னாகப் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் நேற்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
வீட்டில் இருந்த புறப்பட்ட தமது பெண் பிள்ளை வீடு திரும்பவில்லை எனவும் அவரை யாராவது கடத்தி இருப்பார்கள் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது வீட்டில் இருந்து சென்ற பெண்ணை காணவில்லை என முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
