Connect with us

சினிமா

எங்கிட்ட 1000 போட்டோஸ் இருக்கு… வெளியிடவா? ரங்கராஜை எச்சரித்த ஜாய்.! வைரலான வீடியோ

Published

on

Loading

எங்கிட்ட 1000 போட்டோஸ் இருக்கு… வெளியிடவா? ரங்கராஜை எச்சரித்த ஜாய்.! வைரலான வீடியோ

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இடையிலான பிரச்சனை கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வரும் முக்கியமான விவகாரமாக உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு, திருமணம், பின்னர் ஏற்பட்ட சண்டைகள், குழந்தை பிறப்பு, என ஒவ்வொரு கட்டத்திலும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா கூறியிருந்தார். அந்த அறிக்கை வெளிவந்தது முதல் இருவருக்கு இடையில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதற்கிடையில், சமீபத்தில் ஜாய் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த குழந்தை பிறந்ததை அடுத்து, குடும்பத்திலும், சமூகத்திலும் ஏற்பட்ட பிரச்சனைகள் மேலும் தீவிரமடைந்தன. இதேநேரத்தில் ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள வீடியோ மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.ஜாய் கிரிஸில்டா தனது புதிய வீடியோவில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, “என்ன ரங்கராஜ் இதெல்லாம்? அந்த குழந்தையின் கண்ணீர் உன்ன சும்மா விடுமா? பொண்ணுங்க என்ன Use and Throw-ஆ? எங்கிட்ட 1000 போட்டோஸ் இருக்கு… வெளியிடவா? அவற்றை எல்லாம் வெளியிட்டால் நீ என்னுடன் விருப்பப்பட்டு வாழ்ந்தாயா இல்லையா என்பது உலகத்துக்குத் தெரியும். நீதிமன்றத்துக்குச் சென்று டி.என்.ஏ டெஸ்டுக்காக உத்தரவு வாங்கி வா!” என்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றன. பலரும் ஜாய்க்கு ஆதரவாக கருத்துகள் தெரிவிக்க, சிலர் ரங்கராஜின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.வீடியோவில் ஜாய் குறிப்பிட்டது போல, டி.என்.ஏ பரிசோதனை குறித்து பெரிய விவாதம் எழுந்துள்ளது. “அந்த குழந்தை யாருடையது?” என்ற கேள்வி மீண்டும் வந்திருக்கிறது. எனினும், விசாரணையின் போது ரங்கராஜ் “அந்த குழந்தை என்னுடையது தான், டி.என்.ஏ டெஸ்ட் தேவையில்லை” என்று கூறியதாக ஜாய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், ரங்கராஜ் உண்மையில் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராகுவாரா? , இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன