வணிகம்
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்: ‘ஒரு ஹாய்’ மெசேஜ் போதும்: வாட்ஸ்அப்பில் ஈஸியாக தரிசன டிக்கெட் புக் செய்யலாம்!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்: ‘ஒரு ஹாய்’ மெசேஜ் போதும்: வாட்ஸ்அப்பில் ஈஸியாக தரிசன டிக்கெட் புக் செய்யலாம்!
திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள் எளிதில் தரிசன டிக்கெட்டுகளைப் பெறும் வகையில், வாட்ஸ்அப் வழியாக புக்கிங் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை; ஒரு சில நிமிடங்களில் உங்கள் டிக்கெட் உங்கள் கையில்.திருப்பதி ஏழுமலையான் சுவாமி தரிசன டிக்கெட்களுக்கு 20 மணி நேரம் காத்திருப்பு? இனி இல்லை!உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.சிறப்பு தரிசனம் அல்லது ஸ்ரீவாரி தரிசனம் போன்ற கட்டணச் சேவைகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக பலரும் இணையதளங்கள் அல்லது மற்ற நபர்களை நாடி வந்தனர்.ஆனால், அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி மூலமே ஏழுமலையான் தரிசனத்திற்கான டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுதான் பக்தர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய நற்செய்தி.வாட்ஸ்அப்பில் ‘ஹாய்’ அனுப்புங்கள்… டிக்கெட் பெறுங்கள்!இந்த எளிய செயல்முறையால் டிக்கெட் புக்கிங் செய்வது இனி 5 நிமிட வேலைதான். இதைச் செய்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:வாட்ஸ்அப் நம்பர்: முதலில், தேவஸ்தானத்தால் வழங்கப்பட்ட 9552300009 என்ற வாட்ஸ்அப் எண்ணை உங்கள் போனில் சேமித்துக்கொள்ளுங்கள். வாட்ஸ் அப்பில் இந்த எண்ணுக்குச் செல்லுங்கள்.ஆரம்பம்: அந்த எண்ணுக்கு நீங்கள் ஒரு ‘ஹாய்’ (Hi) என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள்.மொழி தேர்வு: ஆங்கிலத்தில் தொடர விரும்பினால், ‘EN’ என்று டைப் செய்து அனுப்பவும். தெலுங்கு மொழி தெரிந்தவர்கள் அப்படியே தொடரலாம்.சேவை தேர்வு: அடுத்த சில நொடிகளில், உங்களுக்குத் தேவையான தரிசன சேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். அதில் நீங்கள் விரும்பும் தரிசனத்தைத் தேர்வுசெய்யவும்.புக்கிங் & பணம் செலுத்துதல்: அதன் பிறகு, உங்களுக்கான டிக்கெட்டைப் பதிவுசெய்து, ஆன்லைன் வழியாகப் பணத்தைச் செலுத்தி உடனடியாக உங்கள் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.பக்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சிஇந்த எளிய, டிஜிட்டல் முறை, பலரும் புக்கிங் செய்வதில் எதிர்கொண்ட சிரமங்களைத் தீர்த்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல், தாங்களே நேரடியாக வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்டைப் பெறலாம் என்பதால், திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்குத் தயாராகும் பக்தர்கள் மத்தியில் இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நவம்பர் 7 அன்று உங்கள் செயல் அலுவலருடன் பேசுங்கள் (Dial Your EO)இதனிடையே, ‘டயல் யுவர் ஈஓ’ (Dial Your EO – உங்கள் செயல் அலுவலருடன் பேசுங்கள்) நிகழ்ச்சி வரும் நவம்பர் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடைபெறவுள்ளது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இந்த நிகழ்ச்சி, உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் பயனடையும் வகையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் (SVBC) நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியின்போது, பக்தர்கள் நேரடியாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) செயல் அலுவலர் (EO) அனில் குமார் சிங்கால் உடன் தொலைபேசியில் பேசி, தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். பக்தர்கள் தொடர்பு கொள்ள 0877-2263261 என்ற வேண்டிய தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
