இலங்கை
மனைவி மனைவியின் தாக்குதலில் சிவில் பாதுகாப்பு அதிகாரி படுகாயம்; விபரீதத்தில் முடிந்த தகராறு
மனைவி மனைவியின் தாக்குதலில் சிவில் பாதுகாப்பு அதிகாரி படுகாயம்; விபரீதத்தில் முடிந்த தகராறு
மஹியங்கனை, சொரபோர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மனைவி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி இன்று (6) மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்தப்பட்ட நபர், கிராதுருகோட்ட துணை மாவட்ட தலைமையகத்தில் பணியாற்றும் 43 வயதுடைய சிவில் பாதுகாப்பு அதிகாரி என பொலிசார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் மஹியங்கனை, சொரபோர மீகஹபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை, சொரபோர மீகஹபிட்டிய பகுதியில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் தாயான 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, மனைவி கணவரை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்த பொலிசார் மேலதிக விசாரணைகளி மேற்கொண்டு வருகின்றனர்.
