இலங்கை
சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் எளிய வழிமுறைகள்!
சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் எளிய வழிமுறைகள்!
சிறுநீரக கற்கள் என்பவை நம் உடலில் சிறுநீரகங்களில் உருவாகும் கடினமான தாது மற்றும் உப்புப் படிகங்களாகும்.
இவை சிறுநீரில் அதிகப்படியான தாதுக்கள் சேர்வதால் அல்லது போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படலாம்.
பொதுவாக சிறு கற்கள் தானாக வெளியேறும், ஆனால் பெரிய கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
சிறுநீரக கற்களின் பொதுவான அறிகுறிகள், முதுகு, வயிறு அல்லது பக்கவாட்டில் கடுமையான வலி, குமட்டல், வாந்தி மற்றும் சிறுநீரில் இரத்தம் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் சில உணவு முறைகளை பின்பற்றினால், சிறுநீரக கற்கள் கரைய உதவும்.
பார்லித் தண்ணீர்: இது சிறுநீரக நச்சுகளை நீக்கி, கற்களின் அடர்த்தியைக் குறைத்து அவை சிறுநீர் மூலம் வெளியேற உதவுகிறது.
எலுமிச்சை சாறு: இதில் உள்ள சிட்ரேட்டுகள் கற்கள் உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே உள்ள கற்களை உடைக்கும் திறனையும் கொண்டுள்ளது.
இளநீர்: இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்து, சிறுநீரகப் பாதையில் தேவையற்ற தாதுக்கள் படிவதைக் குறைத்து, கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
மாதுளை: மாதுளையில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் மற்றும் இயற்கை அமிலங்கள், கற்கள் உருவாகக் காரணமான தாதுக்கள் படிவதைத் தடுக்கின்றன.
அதுமட்டுமல்லாது தினமும் அதிக தண்ணீர் குடிப்பதும், உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்க அத்தியாவசியமாகும்.
