Connect with us

பொழுதுபோக்கு

முடிச்சுவிட்டாங்க போங்க: தீபக்கை அழவைத்த போட்டியாளர்கள் – குழம்பி போன பிக்பாஸ்

Published

on

deepak

Loading

முடிச்சுவிட்டாங்க போங்க: தீபக்கை அழவைத்த போட்டியாளர்கள் – குழம்பி போன பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தினந்தோறும் போக்களமாகவே உள்ளது. 20 போட்டியளர்களில் 5 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இதனிடையே வைல்டு கார்டு போட்டியாளர்கள் என திவ்யா, சாண்ட்ரா, பிரஜின், அமித் ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர். எப்படியாவது பிக்பாஸ் நிகழ்ச்சி சூழலை மாற்ற வேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர், இருந்தாலும் எந்த முன்னேற்றமும் இருந்த மாதிரி இல்லை.வீட்டு தலையான திவ்யாவிற்கும்  போட்டியாளரான பார்வதிக்கும் இடையே மோதல்கள் வெடித்து வருகிறது. நீ சொன்னாலும் கேட்மாட்டேன், பிக்பாஸ் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்ற கோணத்தில் பிரச்சனையை மட்டுமே ஸ்டார்டஜியாக வைத்து பார்வதி விளையாடி வருகிறார். இதனிடையே அங்கு தனக்கு சப்போர்ட் இல்லை என்று தெரிந்ததும் கம்ருதீனை சில நாட்கள் லவ் என்ற பெயரில் யூஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடுமே பார்வதிக்கு எதிராக இருக்கும் நிலையில் திவாகர் மட்டும் தான் பார்வதிக்கு ஆதரவாக இருக்கிறார்.வீட்டுத் தலையான திவ்யா தன்னால் முடிந்த எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து வருகிறார். இவரது திறமையில் இம்ப்ரஸான மக்கள் திவ்யா தான் டைட்டில் வின்னர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஹோட்டல் டாக்ஸ் ஒன்றை பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கொடுத்தார்கள். இதற்கு விருந்தினர்களாக தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர் வந்திருந்தனர். இந்த டாஸ்கில் சாண்ட்ரா எல்லாம் செய்தாலும் திவாகரும், வியன்னாவும் தாங்கள் எல்லாம் செய்ததாக பெருமை பேசிக் கொண்டு சுற்றி திரிந்தனர்.இதையடுத்து, பிக்பாஸ் சாண்ட்ராவிற்கு  சீக்ரெட் டாஸ்க் கொடுத்தார். அதனால் சாண்ட்ரா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாஸ்கை செய்துக் கொண்டிருந்தார். மேலும், நீ மட்டும் தான் கடுப்பேத்துவியா என்று பார்வதியை கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். அதாவது, ஒரு மாதமாக பார்வதி செய்துக் கொண்டிருந்த எல்லாவற்றுக்கும் சாண்ட்ரா ரீவென்ஞ் எடுத்தார். ஹோட்டல் டாஸ்கில் மேனேஜராக இருந்த விக்ரம், திவாகர் தப்பு செய்கிறார் என்றும் சொல்லியும் அவருக்கு தான் சப்போர்ட் செய்கிறார். இப்படி ஹோட்டல் டாஸ்கினால் பிக்பாஸ் வீட்டில் பல பிரளயங்கள் வெடித்தது. மேனேஜராக இருக்கும் விக்ரம், ஆர்டர் போடாமல் எல்லாரிடம் போய் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். இதை பார்த்து கடுப்பான பிக்பாஸ் ஆடர் போடுங்க கெஞ்சாதீங்க என்று சொல்லியும் அவர் கெஞ்சிக் கொண்டு தான் இருக்கிறார். ஒரு கட்டத்தில் முடியாமல் தன் மேனேஜர் பதவியை ராஜினாமா செய்கிறார். பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்த தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர் போட்டியாளர்களை நன்றாக வறுத்தெடுத்தனர்.யூனிட்டியே இல்லை, இது எப்படிப்பட்ட வீடு தெரியுமா? எங்க மெமரீஸ் எல்லாம் கலெக்ட் பண்ண வந்தா இப்படி பண்றீங்க என்று அழுதேவிட்டார். இப்படி ஹோட்டல் டாஸ்க் சொதப்பலாக முடிந்தது. பிக்பாஸை பார்க்கும் மக்கள் பிக்பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன