சினிமா
விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் உறுதி.! எப்போது தெரியுமா.?
விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் உறுதி.! எப்போது தெரியுமா.?
தெலுங்கு திரையுலகின் பிரபலமான ஜோடிகளில் ஒருவராக கருதப்படும் நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா, நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் மத்தியில் காதல் வதந்திகளுக்கு உள்ளாகி வந்தனர். சமீபத்தில் அந்த வதந்தி நிஜமாக மாறியிருந்தது. இந்நிலையில், இருவரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பல ஊடகங்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளன.இதை இருவரும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சில பிரபலமான சினிமா வட்டாரங்கள் இந்த செய்தியை உறுதியாக கூறியுள்ளன.திருமண நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் வெளிவந்த தகவல்கள் படி, இருவரும் ராஜஸ்தானின் அழகிய நகரம் உதயபூரில் (Udaipur) மணமுடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் திருமணத்திற்காக இந்த நகரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள், அதேபோலவே விஜய்-ராஷ்மிகா ஜோடியும் தங்களின் திருமணத்தை அந்த சூழலில் நடத்தவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
