இலங்கை
சிரியா புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் – எதிர்கட்சிகள் வலியுறுத்து!

சிரியா புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் – எதிர்கட்சிகள் வலியுறுத்து!
ஆறு மாதங்களுக்குள் சிரியா புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதன்படி இன்னும் 18 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஹாடி அல் பஹாரா தெரிவித்துள்ளார்.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதையடுத்து, அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறினார்.
தனது தந்தையின் 30 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் 2000 ஆம் ஆண்டு சிரிய அதிபராக பதவியேற்ற பஷர் அல் அசாத், சுமார் 25 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகித்ததாகவும், ஏறக்குறைய 50 வருடங்களாக அசாத் குடும்பத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.