Connect with us

பொழுதுபோக்கு

இந்த ஆண்டில் தைரியமான சில அடிகள்; மீண்டும் இயக்குனருடன் நெருக்கமாக சமந்தா: லேட்டஸ்ட் போட்டோஸ்!

Published

on

Samantha raj

Loading

இந்த ஆண்டில் தைரியமான சில அடிகள்; மீண்டும் இயக்குனருடன் நெருக்கமாக சமந்தா: லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகை சமந்தா ரூத் பிரபுவும், திரைப்படத் இயக்குனர் ராஜ் நிடிமோருவும் காதலிப்பதாக நீண்ட நாட்களாகவே கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனினும், இவர்கள் இருவருமே இதுவரை தங்கள் உறவை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. இந்நிலையில், சமந்தா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் இயக்குநருடனான தனது உறவை வெளிப்படுத்தியுள்ளார் என்று தோன்றுகிறது. ஏனெனில், இருவரும் கட்டிப்பிடித்து நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.சமந்தா தனது ‘சீக்ரெட் அல்கெமிஸ்ட்’ (Secret Alchemist) என்ற வாசனை திரவிய பிராண்டைத் தொடங்கிய நிகழ்விலிருந்து ஒரு புகைப்படத்தில், அவர் ராஜுடன் நெருக்கமாக நின்று போஸ் கொடுத்திருந்தார். சமந்தா தனது கைகளால் ராஜை அணைத்திருந்தார், அதே சமயம் ராஜும் சமந்தாவின் இடுப்பைப் பிடித்திருந்தார். மற்றொரு புகைப்படத்தில், ராஜ் அவருக்குப் பின்னால் நிற்க, அவர் நிகழ்வில் கலந்துகொண்ட மற்றவர்களுடன் காணப்பட்டார். இதில் ஒரு படத்தில் நடிகை தமன்னா பாட்டியாவும் இருக்கிறார். சமந்தா அந்தப் பதிவின் தலைப்பில், “நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்டிருக்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், எனது வாழ்க்கையில் சில துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். இடர்பாடுகளை கடந்து, எனது உள்ளுணர்வை நம்பி, நான் செல்லும்போதே கற்றுக்கொண்டேன். இன்று, நான் சிறிய வெற்றிகளைக் கொண்டாடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.மேலும், அவர், “நான் சந்தித்த சில பிரகாசமான, கடின உழைப்பாளி மற்றும் உண்மையான நபர்களுடன் பணியாற்றுவதில் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். நிறைய நம்பிக்கையுடன், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று எனக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.சமந்தா மற்றும் ராஜ் இருவரும் தி ஃபேமிலி மேன் 2 (The Family Man 2) மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி (Citadel: Honey Bunny) ஆகிய வெப தொடர்கிளல் இணைந்து பணியாற்றினர். சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் அவருடன் அடிக்கடி புகைப்படங்களைப் பகிர்ந்ததால், இவர்களின் காதல் வதந்திகள் வேகமெடுத்தன. அது அவர்களின் உறவு குறித்த யூகங்களைத் தூண்டியது. ஆனால் அவர்கள் இன்னும் எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இருவரும் ஒன்றாக விடுமுறையை ரசிப்பதாக அடிக்கடி காணப்படுவது இந்த யூகங்களை மேலும் அதிகப்படுத்துகிறது.A post shared by Samantha (@samantharuthprabhuoffl)தற்போது, சமந்தா, ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகும் ரக்த பிரம்மாண்ட்: தி ப்ளடி கிங்டம் (Rakt Brahmand: The Bloody Kingdom) என்ற தொடரில் நடித்து வருகிறார். இத்தொடரில் ஆதித்யா ராய் கபூர், அலி ஃபசல், வாமிகா கபி, மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோரும் நடிக்கின்றனர். தற்போது தயாரிப்பில் இருக்கும் இந்தத் தொடர் 2026-ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மனோஜ் பாஜ்பாய், ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் பிறர் நடிக்கும் ராஜ் & டிகேவின் தி ஃபேமிலி மேன் சீசன் 3 (The Family Man season 3) நவம்பர் 21 அன்று வெளியாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன