Connect with us

தொழில்நுட்பம்

நிலவின் மீது அடுத்தடுத்து மோதிய 2 விண்கற்கள்… ஜப்பான் வானியலாளர் வெளியிட்ட த்ரில்லிங் வீடியோ!

Published

on

asteroids hit Moon

Loading

நிலவின் மீது அடுத்தடுத்து மோதிய 2 விண்கற்கள்… ஜப்பான் வானியலாளர் வெளியிட்ட த்ரில்லிங் வீடியோ!

கடந்த வாரத்தில் நிலவின் மீது பரபரப்பான வானியல் சம்பவம் நிகழ்ந்துள்ளது! ஆம், அடுத்தடுத்து 2 விண்கற்கள் நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதிச் சிதறியுள்ளன. இந்த அரிய நிகழ்வை ஜப்பானைச் சேர்ந்த வானியலாளர் டாய்ச்சிபுஜி (Daichi Fujii) தனது தொலைநோக்கி மூலம் மிகத் துல்லியமாகப் படம்பிடித்துள்ளார். ஹிராட்சுகா நகர அருங்காட்சியகத்தில் பணியாற்றும் இவர், இந்த மோதல்கள் குறித்த வீடியோவை ‘X’ தளத்தில் பகிர்ந்துள்ளார்.昨夜も月面衝突閃光が出現しました!2025年11月1日20時49分19.4秒の閃光です(270fps,0.03倍速再生)。月は大気がないため流星は見られず、クレーターができる瞬間に光ります。おうし座南流星群や北群由来の可能性があります。輝面比は78%もありましたが、太い月は観測時間を稼げるメリットもあります。 pic.twitter.com/HRLzSnke4hஎப்போது நடந்தது? முதல் விண்கல் அக்டோபர் 30 அன்றும், 2-வது விண்கல் நவம்பர் 1 அன்றும் நிலவைத் தாக்கியுள்ளன. எங்கிருந்து வந்தன? இது ‘டாரிட் எரி நட்சத்திர மழை’ (Taurid Meteor Shower) எனப்படும் நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கலாம் என புஜி விளக்கியுள்ளார். பூமியைப் போல நிலவுக்கு வளிமண்டலம் (Atmosphere) கிடையாது. அதனால், விண்கற்கள் நுழையும்போது எரிந்து ஒளிரும் ‘எரி நட்சத்திரமாக’த் தெரியாது. அதற்கு பதிலாக, அவை நேரடியாக நிலவின் தரையில் மோதும்போது, ஒரு பெரிய பள்ளம் (Crater) உருவாகும். அந்த அதிபயங்கர மோதலின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பமும், தூசும்தான் இப்படி வெளிச்ச வெடிப்பாக (Flash) நமக்குத் தெரிகிறது.இந்த மோதல் எவ்வளவு பெரியது?முதல் விண்கல் மோதியதில், நிலவின் மீது சுமார் 10 அடி அகலத்திற்கு ஒரு புதிய பள்ளம் உருவாகியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கியில் பதிவானதை விட உண்மையான பாதிப்பு இன்னும் பெரியதாகக் கூட இருக்கலாம் என்று புஜி கூறியுள்ளார். ஏனெனில் கேமரா பிக்சல்கள் முழுமையாக ஒளியை உள்வாங்கியதால் (pixel saturation) பாதிப்பின் அளவை துல்லியமாக கணிப்பதில் சிக்கல் உள்ளது என்றார்.2-வது விண்கல்லும் இதே எரி நட்சத்திரக் கூட்டத்தைச் சேர்ந்ததாகவே இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த மோதல்கள் சாதாரணமாக நிகழக்கூடியவை என்றாலும், விஞ்ஞானிகள் ‘2024 YR4’ என்ற மற்றொரு விண்கல்லை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த விண்கல், 2032 ஆம் ஆண்டில், சுமார் 3.8% முதல் 4.3% வாய்ப்புடன் நிலவின் மீது மோதக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இதன் பாதையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன