Connect with us

சினிமா

பெரும் சர்ச்சைக்குப் பிறகு கௌரி கிஷனிடம் மன்னிப்பு கேட்ட யூடியூபர்… வைரலான வீடியோ.!

Published

on

Loading

பெரும் சர்ச்சைக்குப் பிறகு கௌரி கிஷனிடம் மன்னிப்பு கேட்ட யூடியூபர்… வைரலான வீடியோ.!

தமிழ் சினிமா உலகில் தற்போது பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியிருக்கிறது “எடை” குறித்த பஞ்சாயத்து. 96 படத்தில் சிறு வயது ஜானுவாக நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த கௌரி கிஷன், சமீபத்தில் “அதர்ஸ்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எதிர்கொண்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு, திரைத் துறையிலிருந்து பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.“அதர்ஸ்” திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு யூடியூபர், கௌரி கிஷனிடம் உடல் எடை குறித்து கேள்வி கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின.அந்த கேள்வி நடிகைக்கு ஏற்றதாக இல்லை என்று பலரும் கருதினர். பொதுவாக ஒரு நடிகையின் தோற்றம் அல்லது உடல் அமைப்பை குறித்து நேரடியாக கேள்வி கேட்பது ஏற்றதல்ல என்று ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வலியுறுத்தினர்.அந்த கேள்வி குறித்து கௌரி கிஷன் தன்னுடைய பதிலை திறம்படக் கூறியிருந்தார். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் அதனை “Stupid question” எனக் குறிப்பிட்டது பெரும் விவாதத்தை கிளப்பியது.கௌரியின் பதிலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். “ஒரு நடிகைக்கு அவளது தோற்றம், எடை அல்லது உடல் அமைப்பை பற்றி கேள்வி கேட்பது சரியானதல்ல” என்று பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்தனர்.அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் யூடியூபரின் பெயர் பெருமளவில் பேசப்பட்டு, அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.நிலைமை தீவிரமாவதை உணர்ந்த அந்த யூடியூபர், தனது விளக்கக் காணொளியை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, “கடந்த இரண்டு நாட்களாக எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது. நான் ஒரு விதத்தில் கேள்வி கேட்டேன், ஆனால் அவர் அதை வேறு விதத்தில் எடுத்துக் கொண்டார். அதனால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. நான் அந்தப் பெண்ணை உருவ கேலி செய்யவில்லை. அவருடைய மனம் காயப்பட்டிருந்தால் நான் மனமாற வருந்துகிறேன்.”இந்த மன்னிப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சில நடிகர்கள், இயக்குநர்கள் , மற்றும் யூடியூப் பிரபலங்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன