சினிமா
இணையத்தை அதிரவைத்த அனுபமாவின் மார்பிங் புகைப்படம்.. குற்றவாளியை கண்டுபிடித்த பொலிஸார்.!
இணையத்தை அதிரவைத்த அனுபமாவின் மார்பிங் புகைப்படம்.. குற்றவாளியை கண்டுபிடித்த பொலிஸார்.!
தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறு மற்றும் மார்பிங் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட சம்பவம் சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை சைபர் கிரைம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீப நாட்களாக, இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நடிகை அனுபமாவை குறிவைத்து சில மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை என்று நம்பிய சிலர் அவற்றை பரப்ப, அதனால் நடிகையின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில், நடிகையின் புகார் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, கேரள சைபர் கிரைம் பிரிவு விரிவான விசாரணையை தொடங்கியது.சமூக வலைதளங்களில் பரவியிருந்த போலி கணக்குகளை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்தபோது, அவற்றில் பலர் உள்ளதாக பொலிஸார் கண்டறிந்தனர். இந்நிலையில் தற்பொழுது இந்த விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
