வணிகம்
இமயமலைக்கே சவால் விடும் ‘மானா பிளாக்’… ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் எடிஷன் அறிமுகம்!
இமயமலைக்கே சவால் விடும் ‘மானா பிளாக்’… ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் எடிஷன் அறிமுகம்!
சாகசப் பிரியர்களே, ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது புகழ்பெற்ற ஹிமாலயன் பைக்கின் புத்தம் புதிய ‘மானா பிளாக் எடிஷனை’ (Mana Black Edition) EICMA 2025 கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இது வெறும் பைக் அல்ல; உலகின் மிக உயரமான, சவால்கள் நிறைந்த சாலைகளில் ஒன்றான ‘மானா கணவாய்’ (Mana Pass) க்கு செலுத்தும் மரியாதை!5,632 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ‘மானா கணவாய்’, கனித்த முடியாத வானிலைக்கும், கொடூரமான நிலப்பரப்பிற்கும் பெயர் போனது. அந்த சவாலான பாதையின் உத்வேகத்தில், இமயமலையின் உறுதியையும் அழகியலையும் பிரதிபலிக்கும் வகையில் ஆழமான ‘மேட் மானா பிளாக்’ (Matte Mana Black) நிறத்தில் இந்த பைக் ஜொலிக்கிறது. ராயல் என்ஃபீல்டின் புதிய ‘ஷெர்பா 450’ (Sherpa 450) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், வெறும் தோற்றத்தில் மட்டும் மிரட்டவில்லை. தொழிற்சாலையிலிருந்தே ஒரு முழுமையான அட்வென்ச்சர் பேக்கேஜாக இது வெளிவருகிறது. ஆம், நீங்கள் ஷோரூமிலிருந்து வாங்கிய உடனேயே சாகசப் பயணத்தைத் தொடங்கலாம்!பாக்டரி-ஃபிட்டட் அக்சஸரீகள்:பாதுகாப்பிற்கான பிளாக் ரேலி ஹேண்ட் கார்டுகள், ஆஃப்-ரோடில் சிறந்த பிடிப்பு மற்றும் வசதிக்கான பிளாக் ரேலி டூயல் சீட், கடினமான பாதைகளுக்கான ரேலி மட்கார்டு, நம்பகமான பயணத்திற்கு வயர்-ஸ்போக்டு ட்யூப்லெஸ் வீல்கள். இந்த மான்ஸ்டரின் இதயப்பகுதியில் 451.65 சிசி, லிக்விட்-கூல்டு, DOHC இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 8,000 rpm-ல் 39.5 PS சக்தியையும், 5,500 rpm-ல் 40 Nm டார்க்கையும் தெறிக்க விடுகிறது. ‘ரைடு-பை-வயர்’ (Ride-by-Wire) டெக்னாலஜி, 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் ‘ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட்’ கிளட்ச் ஆகியவை உங்க பயணத்தை மென்மையாகவும், துல்லியமாகவும் மாற்றுகின்றன.இதன் ஸ்டீல் ட்வின்-ஸ்பார் ஃபிரேம், முன்பக்கத்தில் 200 மிமீ டிராவல் கொண்ட 43 மிமீ அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்குகளையும், பின்பக்கத்தில் அதே 200 மிமீ டிராவல் கொண்ட மோனோஷாக் சஸ்பென்ஷனையும் கொண்டுள்ளது. இதனால், எப்படிப்பட்ட கரடுமுரடான பாதையையும் ஹிமாலயன் எளிதாகச் சமாளிக்கும்.கிரவுண்ட் கிளியரன்ஸ்: தாராளமாக 230 மிமீசீட் உயரம்: 860 மிமீஎரிபொருள் டேங்க்: 17 லிட்டர்கள் (நீண்ட பயணங்களுக்கு ஏற்றது)மொத்த எடை (Kerb Weight): 195 கிலோபிரேக்கிங்-ஐ பொறுத்தவரை, ஸ்விட்ச் செய்யக்கூடிய டூயல்-சேனல் ஏபிஎஸ் (Switchable Dual-Channel ABS) உடன் முன்பக்கம் 320 மிமீ டிஸ்க்கும், பின்பக்கம் 270 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டிரைவரின் கண்ட்ரோல் ரூமாக, ஒரு 4-இன்ச் வட்ட வடிவ TFT டிஸ்ப்ளே உள்ளது. இதில் முழுமையான கூகுள் மேப்ஸ் நேவிகேஷன், ரைடு மோடுகள், மியூசிக் கண்ட்ரோல் மற்றும் USB Type-C சார்ஜிங் வசதியும் உள்ளது! ஹெட்லைட் முதல் இன்டிகேட்டர் வரை அனைத்தும் பவர்ஃபுல் LED விளக்குகள்.தற்போது ஐரோப்பாவில் அறிமுகமாகியுள்ள இதன் விலை, இத்தாலியில் €6,600 ஆகவும், இங்கிலாந்தில் £6,400 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 7.46 லட்சம்) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் முன்பதிவுகள் தொடங்கிவிட்ட நிலையில், இந்த அதிரடி அட்வென்ச்சர் பைக் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
