உலகம்
அமெரிக்காவில் முடங்கிய விமான நிலையங்கள் – 1400 விமானங்கள் இரத்து!
அமெரிக்காவில் முடங்கிய விமான நிலையங்கள் – 1400 விமானங்கள் இரத்து!
அமெரிக்காவில் நிதி சட்டமூலத்தை காங்கிரஸ் மற்றும் குடியரசு கட்சியினர் நிறைவேற்ற தவறியதை அடுத்து கரூவூலத்துறைக்கு தேவையான நிதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பல அரச நிறுவனங்கள் முடங்கியுள்ளன. தொழிலாளர்கள் ஊதியம் இன்றி பணிப்புரிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன்தொடர்ச்சியாக அமெரிக்காவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
விமான கண்காணிப்பாளர் FlightAware இன் படி, கடந்த வெள்ளிக்கிழமை 7,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் 40 முக்கிய விமான நிலையங்களில் தினசரி விமானங்களில் 4% குறைக்குமாறு மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
பணிநிறுத்தம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறைக்கும் வழிவகுத்துள்ளது, அவர்களுக்கு வாரக்கணக்கில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலை அமெரிக்க விமான பயணிகளுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த வார தொடக்கத்தில் நாட்டின் மிகவும் பரபரப்பான 40 விமான நிலையங்களில் விமான திறனை 10% வரை குறைப்பதாக பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அறிவித்தது.
குறைந்தது 12 அமெரிக்க நகரங்களில் விமானங்கள் ஏற்கனவே தாமதமாகிவிட்டதாகவும் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
