Connect with us

சினிமா

பவானி சங்கரின் வெற்றிக்கு இந்த ரெண்டு விஷயமும் தான் காரணமாம்..

Published

on

Loading

பவானி சங்கரின் வெற்றிக்கு இந்த ரெண்டு விஷயமும் தான் காரணமாம்..

தனியார் தொலைக்காட்சி ஒன்றில்  செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர்.  தொடர்ந்து, காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.  பின் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார்.  மேயாத மான் என்ற படத்தில் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அதன் பின்பு மான்ஸ்டர், மாபியா, யானை,  களத்தில் சந்திப்போம்,  அகிலன், பத்து தல, திருச்சிற்றம்பலம்,  ருத்ரன்,  இந்தியன் 2 திரைப்படம், டிமாண்டி காலனி 2  ஆகிய திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றார். டிமாண்டி காலனி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து  இதன் மூன்றாவது பாகத்திலும் பிரியா பவானி சங்கர்  நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாக இருந்தன. இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு  பிரியா பவானி சங்கர் அளித்த பேட்டி  தற்போது வைரல் ஆகி வருகிறது.  அதன்படி அதில் அவர் கூறுகையில்,  கதைகளை தேர்வு செய்வதில் நான் இரண்டு விஷயத்தில் உறுதியா இருக்கேன். ஸ்கிரிப்டும், தயாரிப்பு நிறுவனமும் பார்த்து தான் கதைகளை தேர்வு செய்வேன். ஒரு வலுவான கதை அமையும் போது, தயாரிப்பு நிறுவனமும் அதை சரியாக மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்த்தால் மட்டுமே எல்லோருடைய உழைப்பும் வெளியே தெரியும். நிறைய நல்ல படங்கள் ரெடியாகி கூட ரிலீஸ் பண்ண முடியாமல் கஷ்டப்படுவதை பார்க்கின்றோம். அந்த உழைப்பை மக்களிடம் சேர்க்கின்ற தயாரிப்பு நிறுவனம்  அமையும் போது படத்தின் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும். மேலும்  ஸ்பாட்டுல எங்களுக்கு பின்னாடி க்ரீன்மேட் திரையும், மார்க்கும் தான் வச்சு இருப்பாங்க.. அதை மனசுல வச்சு நடிக்க வேண்டி இருக்கும். எதுவுமே கண் முன்னாடி இருக்காது. எல்லாமே கற்பனை தான். ஆனால் இருக்கிறதா நினைச்சு நடிக்கணும். படம் திரைக்கு வரும் போது திகிலான காட்சிகளும் இடம்பெறுவதால் நாங்கள் பயப்படுறதா தெரியுது. மற்றபடி நாங்க பயப்படாமல் தான் நடிக்கின்றோம். எனக்கு பேய் நம்பிக்கை கிடையாது. ஆனால் இருட்டுக்கு கொஞ்சம் பயப்படுவேன். இருளான இடத்துல என்ன இருக்கும்னு தெரியாம ஒரு பதட்டம் உண்டாகிடும்  என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன