Connect with us

பொழுதுபோக்கு

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்… எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டைட்டில்’ அறிவிப்பு

Published

on

jsj

Loading

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்… எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டைட்டில்’ அறிவிப்பு

திரையுலகில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு செய்தி என்றால், அது தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாவதுதான், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகி, மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கி, இளம் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய ஆக்ஷன் திரைப்படத்தின் ‘டைட்டில்’ நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்புக் குழுவினர் தங்கள் சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.Get ready for the big reveal!✨The Title of #JSJ01 will be unveiledtomorrowat10AM.Staytuned⚡@LycaProductions#Subaskaran@gkmtamilkumaran@sundeepkishan@MusicThaman@Cinemainmygenes@krishnanvasant@Dir_sanjeev@hariharalorven@ananth_designer@SureshChandraa@DoneChannel1pic.twitter.com/O9vGDpI7NDஇந்தப் படம், பணத்தை மையமாக வைத்து ஒரு பக்கா ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திலேயே ஆக்ஷன் களத்தில் இறங்கியுள்ளார் என்பது தெளிவாகிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களின் கூட்டணி இந்தப் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சந்தீப் கிஷன் மற்றும் படக்குழுவினர் இதில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.தமிழ் சினிமாவில் ஒரு இளம் நட்சத்திர வாரிசு இயக்குநர் மற்றும் திறமையான நடிகர் இணையும் இந்தப் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும், மேலும் இந்த ஆக்ஷன் கதைக்களம் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளை காலை 10 மணிக்கு விடை தெரிந்துவிடும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன