சினிமா
கல்லீரல் பாதிப்பால் காலமானார் பிரபல நடிகர் அபிநய்.. கதறி அழும் பிரபலங்கள்.!
கல்லீரல் பாதிப்பால் காலமானார் பிரபல நடிகர் அபிநய்.. கதறி அழும் பிரபலங்கள்.!
தமிழ் சினிமா ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தும் செய்தி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதாவது, “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அபிநய், கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது வயது 44.இச்செய்தி வெளிவந்தவுடனே, சமூக வலைத்தளங்கள் முழுவதும் சோகச் செய்திகளால் நிரம்பி விட்டன. அபிநயின் ரசிகர்கள், நண்பர்கள், மற்றும் திரைப்பட உலகினர் அனைவரும் அவரை நினைத்து மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர்.அபிநய் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம். அவர் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானது 2002ஆம் ஆண்டு வெளிவந்த “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் தான். அதில் அபிநய் நடித்த பாத்திரம், ஒரு சாதாரண இளைஞனின் உணர்ச்சிகளையும், வாழ்க்கை போராட்டத்தையும் பிரதிபலித்தது. அத்தகைய நடிகர் இறந்தது தற்பொழுது திரையுலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
