உலகம்
இலங்கைக்கு நினைவுத் தபால் முத்திரை வெளியிட்டுள்ள சவூதி அரேபியா!
இலங்கைக்கு நினைவுத் தபால் முத்திரை வெளியிட்டுள்ள சவூதி அரேபியா!
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சவூதி அரேபியா நினைவு முத்திரையை வெளியிட்டுள்ளது.
சவூதி அஞ்சல் வெளியிட்ட இந்த நினைவுத் தபால்முத்திரையை, நேற்று 09ஆம் திகதி ரியாத்தில் வைத்து சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரதிடம் கையளித்தார். இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு வரலாற்றுத் தருணம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ரியாத்தில் நடைபெறும் 26வது ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தற்போது சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளதுடன் குறித்த சந்திப்பின்போது, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள முதலீட்டுக்குச் சாதகமான சூழல் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் விரிவாக விளக்கியதுடன், பல்வேறு துறைகளிலும் நாட்டில் உருவாகியுள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சவூதி அரேபியாவின் தனியார் துறைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
