பொழுதுபோக்கு
ஒரே மைக் தான், 3 பேர் ஒரே நேரத்தில் பாடணும்; டி.எம்.எஸ் – சீர்காழி கோவிந்தராஜன் இணைந்த இந்த பாட்டு ரொம்ப ஃபேமஸ்!
ஒரே மைக் தான், 3 பேர் ஒரே நேரத்தில் பாடணும்; டி.எம்.எஸ் – சீர்காழி கோவிந்தராஜன் இணைந்த இந்த பாட்டு ரொம்ப ஃபேமஸ்!
தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என புகழப்பட்ட நடிகர் ஜெமினி கணேசன் தனது கர்வத்தை விட்டு ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியாரிடம் அவர் எடுத்த ‘ராமு’ படத்தில் ராஜா கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுக்கும் படி கேட்டார். இப்படத்திற்கு ஜெமினி கணேசனின் தோழர் சீதாராமன் தான் திரைக்கதை எழுதியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய்சங்கரை தான் போட வேண்டும் என நினைத்த நிலையில் ஜெமினி கணேசன் வந்து கேட்டதும் மெய்யப்ப செட்டியார் தவிர்க்க முடியாமல் தவிர்த்துள்ளார். இந்த படத்திற்கு என்ன சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறேன் என்று ஜெமினி கணேசன் தெரிவித்த நிலையில் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன் என மெய்யப்ப செட்டியார் சொல்லியுள்ளார். இதையடுத்து மெய்யப்ப செட்டியார் தனது பிள்ளைகளிடம் ஆலோசனை கேட்ட நிலையில் அவர்கள் ஜெய்சங்கரையை பரிந்துரைத்துள்ளனர். ஆனால், மெயப்ப செட்டியார் மனைவியை இழந்து வாய் பேச முடியாத மகனின் சோகத்தை தாங்க ஒரு சரியான கதாபாத்திரம் வேண்டும். அதற்கு ஜெமினி கணேசன் தான் சரியாக இருப்பார் என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார். தந்தை சொன்னதால் பிள்ளைகளும் எதுவும் வாதிடவில்லை. அந்த காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அனைத்து கதாபாத்திரங்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர். 1966-ஆம் ஆண்டு ஏ.சி.திருலோக சந்தர் இயக்கத்தில் வெளியான இப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது. இந்தியில் வெளியான ’தூர் ககன் கி சாவோன் மேயின்’ திரைப்படத்தின் ரீமேக் தான் ‘ராமு’ . ஹிந்தியில் இப்படம் படு தோல்வி அடைந்த நிலையில் தமிழில் பெறும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்ணன் வந்தான்’ பாடல் எப்படி பாடப்பட்டது என்பது குறித்து பாடகர் டி.எம்.எஸ் பேசியுள்ளார்.அவர் கூறியதாவது, ”ராமு படத்தில் என் தம்பி சீர்காழி கோவிந்த ராஜனும் நானும் சேர்ந்து பாடினோம். படத்தில் ஒரு சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நாகையா பாடிக்கொண்டிருப்பார். அவர் பாடிக் கொண்டிருக்கும் போது தன் குழந்தையை கடவுள் கண்ணன் காப்பாற்றியது குறித்து சந்தோஷப்பட்டு ஜெமினி கணேசன் பாடுவார். இந்த பாடலின் போது சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் போது நான் இடையில் பாட வேண்டும். இன்று இருப்பது போது தனி தனி மைக் எல்லாம் கிடையாது. ஒரே மைக் தான் இருக்கும். அதில் தான் இருவரும் பாட வேண்டும். நான் பாடும் பொழுது சீர்காழி கோவிந்த ராஜன் ஒதுங்கிவிடுவார். அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் உணர்ச்சியுடன் பாடியிருப்பேன். அந்த பாடல் மிகவும் அருமையான பாடல்” என்றார்.
